தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. கடலூர், சென்னை நகரங்களில் பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுமுகமாக முஸ்லிம் சமுதாய அமைப்புகள் உள்ளிட்ட பொதுநல அமைப்புகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவை ஒருபுறமிருக்க, காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியில் நேற்று (04.12.2015. வெள்ளிக்கிழமை) ஜும்ஆ தொழுகைக்குப் பின், அப்பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ, அரபியிலும் - தமிழிலும் சிறப்புப் பிரார்த்தனை செய்தார்.
சென்னை, கடலூர் உள்ளிட்ட நகரங்களில் பெய்யும் மழையை, தேவையுள்ள பிற பகுதிகளுக்குத் திருப்புமாறும், அந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவதிகளைப் போக்குமாறும், அவர்களுக்கு தொற்றுநோய் உள்ளிட்ட எந்த நோய்களும் நேராமல் பாதுகாக்குமாறும், அவர்களது மீட்பு - நிவாரணத்திற்காக களப்பணியாற்றும் அனைவருக்கும் நிறைவான அருளைத் தருமாறும் இறைவனிடம் அவர் இறைஞ்ச, அனைவரும் ‘ஆமீன்’ கூறி சிறப்புப் பிரார்த்தனையில் பங்கெடுத்துக்கொண்டனர்.
சிறிய குத்பா பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|