சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு - KCGC அமைப்பின் மூலம் உதவ விரும்புவோர், அதற்கான வாட்ஸ் அப் குழுமத்தில் இணைந்து, கருத்துப் பரிமாறிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த KCGC மழை வெள்ள நிவாரணக் குழுவின் அறிக்கை:-
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, காயல்பட்டினம் மக்களை ஒருங்கிணைத்து இயங்கி வரும் காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையத்தின் சார்பில் வெள்ள நிவாரணக் குழு நியமிக்கப்பட்டு, அக்குழுவின் மூலம் - உலக காயல் நல மன்றங்கள் மற்றும் தனியார்வலர்களை ஒருங்கிணைத்து, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெள்ள நிவாரணக் குழுவின் அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும், கருத்துச் சொல்வதற்கும் என, “KCGC-Flood Relief Fund” எனும் பெயரில் வாட்ஸ் அப் (Whatsapp) குழுமம் துவக்கப்பட்டு, அதில் கருத்துப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டு, செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு KCGC வெள்ள நிவாரணக் குழுவின் மூலம் உதவ விரும்புவோரும், உதவிகளைச் சேகரித்துத் தர விரும்புவோரும்,
(1) சொளுக்கு எம்.ஏ.சி.முஹம்மத் நூஹ் (+91 93828 08007)
(2) குளம் முஹம்மத் தம்பி (+91 98401 84838)
ஆகியோருள் ஒருவரை அணுகி, விபரம் தெரிவிக்கலாம் என இதன்மூலம் அறியத் தருகிறோம். நன்றி.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
KCGC தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |