சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு - KCGC அமைப்பின் மூலம் வங்கிக் கணக்கு வழியே உதவ விரும்புவோருக்காக, வங்கிக் கணக்கு விபரங்கள் தரப்பட்டுள்ளது. இதுகுறித்த KCGC மழை வெள்ள நிவாரணக் குழுவின் அறிக்கை:-
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, காயல்பட்டினம் மக்களை ஒருங்கிணைத்து இயங்கி வரும் காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையத்தின் சார்பில் வெள்ள நிவாரணக் குழு நியமிக்கப்பட்டு, அக்குழுவின் மூலம் - உலக காயல் நல மன்றங்கள் மற்றும் தனியார்வலர்களை ஒருங்கிணைத்து, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
(1) KCGC வெள்ள நிவாரணக் குழுவின் மூலம் - தமது வங்கிக் கணக்கு வழியே நிதியுதவி செய்திட விரும்புவோர், பின்வரும் வங்கிக் கணக்குகளில் தமது பங்களிப்பைச் செலுத்தலாம் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது:-
Serve All Foundation
AXIS Bank
A/C no.913020023402404
Mylapore Branch
IFS Code: UTIB0000006
(2) இது தவிர, Savings Bank (SB) அக்கவுண்ட் வழியே நிதியளிக்க விரும்புவோர்,
M.A.C.Mohamed Noohu
ICICI Ac No.615301503234
IFS Code: ICIC0006153
என்ற வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.
(3) காயல்பட்டினத்தில் தமது நிதி பங்களிப்பை நேரடியாகச் செலுத்த விரும்புவோர், அதற்காக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளரான ஜனாப் எல்.டீ.சித்தீக் அவர்களிடம் (தொடர்பு எண்: +91 98400 95203) வழங்கலாம்.
(4) சென்னையில் தமது நிதி பங்களிப்பை நேரடியாகச் செலுத்த விரும்புவோர், ஜனாப் சொளுக்கு எம்.ஏ.சி.முஹம்மத் நூஹ் அவர்களிடம் (தொடர்பு எண்: +91 93828 08007) வழங்கலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
KCGC தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |