கடலூரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரண கூட்டமைப்பு களமிறங்கிப் பணியாற்றி வருகிறது.
இதுகுறித்த செய்தியை ஊடகங்கள் வழியே அறிந்த - நகரில் “Association and Development of Education and Sports – ADES” எனும் பெயரில் பொதுநலப் பணிகளை தங்களளவில் ஆர்வமுடன் செய்து வரும் இளைஞர்கள் சிலர், தமது நண்பர்களிடையே முயற்சித்து, 15 ஆயிரம் ரூபாயைத் திரட்டியுள்ளனர்.
“காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரணக் கூட்டமைப்”பின் நிதி சேகரிப்புப் பொறுப்பாளர்களுள் ஒருவரான வி.ஐ.புகாரீ வசம் அவர்கள் அத்தொகையை இன்று மாலையில் வழங்கினர்..
விளம்பரம் நோக்கமல்ல என்றும், படித்துக்கொண்டிருக்கும் தாங்களே இந்தளவுக்கு ஆர்வத்துடன் நிதியளிப்பதைப் பார்த்து, நகரிலுள்ள அனைவரும் உற்சாகத்துடன் நிதியளிக்க முன்வர வேண்டும் என்று ஆர்வப்படுத்தவே இதைச் செய்தியாக்கக் கோருவதாக அவர்கள் காயல்பட்டணம்.காம் இடம் கூறினர்.
காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரணக் குழு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|