Re:...DIVIDED WE LIVE - UNITED WE FALL posted bymackie noohuthambi (kayalpatnam )[01 December 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42344
மாமா அவர்கள் மழை நீர் தேங்கி நிற்பதை மட்டும் தொட்டு பேசியிருந்தால் இந்த விமர்சனத்தை நான் பதிவு செய்திருக்க வேண்டி ஏற்பட்டிருக்காது.
நாம் எப்போதுமே இரண்டாக பிரிந்து நின்று பணியாற்றுவதில் தான் நம் ஊருக்கே பெருமை. 1967 தேர்தல் முடிந்த சமயம் அது. தமிழர் தந்தை என்று அழைக்கப்பட்ட ஆதித்தனார் அவர்கள் அண்ணாவின் ஆட்சியிலே ஒரு அமைச்சர்.
காயல்பட்டினத்துக்கு சில நல திட்டங்கள் வேண்டும் என்று அவரிடம் காயல்பட்டினத்தில் இருந்து ஒரு மனு அவரிடம் செல்லும். இன்னும் சில தினங்களில் அதை OK சொல்லலாம் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கும்போது இன்னொரு குழு காயல்பட்டினத்தில் இருந்து அவரை நேரில் சந்தித்து இந்த திட்டம் எங்கள் ஊருக்கு சரிவராது எனவே அதை நீங்கள் நிறைவேற்றினால் மக்கள் கஷ்டப்படுவார்கள் என்று கூறி அந்த திட்டம் நிறைவேறவிடாமல் தடை செய்துவிடுவார்கள். இது ஆதித்தனார் சொன்ன செய்தி.
ஒரே ஒரு வித்தியாசம் அப்போது நேரில் போய் சொல்லி தடை செய்தார்கள் இப்போது நீதி மன்றங்கள் மூலம் அது நடக்கிறது.
நமது நகர்மன்ற தலைவர் ஒரு கோஷ்டி - உறுப்பினர்கள் ஒரு கோஷ்டி - அரசு அதிகாரிகள் வானளாவிய அதிகாரம் படைத்த ஆணையர் தலைமையில் ஒரு கோஷ்டி. எனவே நாம் பிரிந்து நின்று பணியாற்றுவதில் நீங்கள் சொல்வதுபோல் ஊர் நன்மை என்று வரும்போது அதில் கைகோர்த்து செல்லும் மனப்பான்மை இப்போது யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை.
பொது நல இயக்கங்கள் இந்த காரியத்தை செய்ய முயற்சித்தால் அதற்கான பொருளாதாரத்தை எங்கிருந்து திரட்ட முடியும். அதுவும் நகரமன்ற ஒப்புதல் இல்லாமல் எதையும் தன்னிச்சையாக செய்ய அரசியல் சட்டத்தில் இடமில்லை.
உதாரணமாக அஞ்சல் அலுவலகத்துக்கு அருகில் உள்ள பயணியர் தாங்கும் இடத்தை பார்த்திருக்கிறீர்களா. அதன் அவல நிலையை பார்த்து அருகில் பெரிய வணிக வளாகம் கட்டும் ஒரு தனவந்தர் அதை இடித்து விட்டு நவீன முறையில் தன் செலவில் கட்டி தருவதாக சொன்னாராம்.ஆனால் நகர்மன்றம் அதற்கு சம்மதிக்கவிலை அல்லது அதற்கு சில நிபந்தனைகள் விதித்தார்கள் அதனால் அதை அவர் கட்டிக் கொடுக்கும் நிலையிலிருந்து பின் வாங்கிவிட்டார் என்று ஒரு செவி வழி செய்தி கிடைத்தது.
அதே போல் குப்பை கொட்டும் இடம் பப்பரப்பள்ளி என்கிறார்களே இப்போது அதற்கு எதிர்ப்பெல்லாம் வந்துள்ளதே அதற்கு பதிலாக அரசு அங்கீகரித்து வேலைகளும் துவங்கிய நிலையில் இப்போது நீதிமன்ற தடை ஆணை வாங்கி நிலுவையில் இருக்கும் இடம்..இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
உங்களைப் போன்ற நமதூர் சரித்திரம் அறிந்த சான்றோர்கள் இப்படி விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதியாவது ஊர் நல திட்டங்கள் தடை இல்லாமல் நடக்க நகர்மன்ற தலைவர் உறுப்பினர்கள் அதிகாரிகள் எல்லோரும் ஒன்றுபட்டு செயல்படும் நாள் வராதா என்று ஏங்குவதை விட அல்லாஹ்விடம் து ஆ கேட்போம். ஆனாலும் பிடிவாதங்கள் - வறட்டு கௌரவங்கள் நீயா நானா என்ற ஈகோ - விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாமை தொடர்ந்தால் இந்த நலத்திட்டங்களை யாருமே செயல்படுத்த முடியாது.
பூவா தலையா போட்டால் தெரியும் நீயா நானா பார்த்து விடு
பூ விழுந்தால் நான் நினைத்தபடி தலை விழுந்தால் நீ கேட்டபடி.... .
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்கிறது முதிய தலைமுறை
பிரிந்து வாழ்ந்தால் கோடி நிம்மதி என்கிறது புதியதலைமுறை.
தலைமுறை இடைவெளியை சரி செய்ய இப்போது தேவை ஒரு சமரச தலைமுறை.அது உங்கள் தலைமையில் ஏற்பட்டால் மகிழ்ச்சி.அல்லாஹ் உங்கள் முயற்சிக்கு துணை நிற்பானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross