| |
ஆக்கம் எண் (ID #) 183 | | | திங்கள், நவம்பர் 30, 2015 | | வெள்ளக்காடாய் மிதக்கிறது காயல் ஏன்? எழுத்தாளர் / இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாமன்ற அமைப்பாளர்.
|
| இந்த பக்கம் 2773 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய | |
உலகலாவிய வாழும் காயல் வாசிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்றையகாயல் ஊர்கட்சி இரண்டு!
அன்றைய காலத்தில் ஊர்கட்சிகளாக இருபிரிவு வலிமை பெற்று இருந்தது. ஒரு அணியின் பெயர் மக்கள் சேவாசங்கம் அணித்தலைவர் எம்.கே.டி அபூபக்கர் அவர்கள் ஆவார்கள். இவர்கள் அணியில் வடக்குபகுதி மக்கள் குறிப்பாக தோல் தொழில் ஆந்திராவில் செய்பவர்கள் தான் மிகுதியாக இக்கட்சியில் குதித்து இருந்தார்கள்.
மற்றொரு அணி ஜனநாயக சபை அணித்தலைவர் L.K. லெப்பைத் தம்பி அவர்கள் தொழிலோ தங்க நகை மாளிகை இந்த அணியில் அனேகர் நகைக் தொழில் செய்தவர்கள். ஊரிலும் திருச்சி சென்னை என்று தங்க நகை தொழில் ஈடுபட்டு கொண்டு ஊர்கட்சியான எல்.கே. அப்பா அணியின் ஆதரவாக இருந்த போதிலும் ஊர் மக்கள் அசௌகரிய குறைவாக வாழவில்லை. இரு அணியுள்ளோரும் தம் தேவைகளில் எதையும் அனுபவிக்காமல் இருக்கவில்லை. இக்காலத்தை போல பெய்த மழை நீர் தெருக்களில் வெள்ளம் போல தேங்கி நிற்கவில்லை.
இன்று அப்பாபள்ளி தெரு, காட்டுத் தைக்கா தெரு முழுவதும் தேங்கி நிற்பது போல ஊரில் பல இடங்களிலும் ஏன் தேங்கி வெளியோறாமல் இருக்கிறது? அன்றைக் காலத்தில் மழை பெய்தது நீர் தேங்கி நின்றதா? உடனே வெளியேற்றப்பட்டது போல இன்றைய காலத்தில் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் ரோட்டில் மழை நீர் தேங்கி உள்ளதால் மாணவ மாணவியர்கள், சாலையில் நடப்போர், சாலையை கடப்போர் வெள்ளநீர் கால்வாயில் முட்டு வரை நனைந்து நீந்தி போக வேண்டியதாக உள்ளதை யாருமே கண்டுகொள்ளாதது ஏன்?
நகராட்சி பணியாட்கள் வந்து வெள்ள நீரை வெளியோற்றவிடாமல் மறைமுகமாக தடுப்பவர் யார்? இந்த அநியாயத்தை மறைந்து இருந்து செய்கிறவர் யார்? இதனால் சிறுகுழந்தை முதல் முதியோர் வரை இன்று வீதில் பல இடத்தில் அவதிபட்டு கீழே விழுந்து கால் முறிந்தோர் பட்டியலில் இடம் பிடித்துள்ள தகவலும் சங்கத்துக்கு சங்கம் பேசப்படுகிறது. இதனால் பண்டாரவிளைக்காரர் கால்முறிவு கேஸ் நிறைய போவதும் தெரிந்து வேதனைபடுகிறோம்.
இதற்கு காரணமாக இருப்பவர்கள் அல்லாஹ் இடம் நாளைக்கு பதில்சொல்லி ஆக வேண்டும். ஊர் கட்சி இருந்தபோது ஊரைபாழ்படுத்தி போட்டு குளிர்காயவில்லை. இன்றுள்ள அரசியல் மேதைகள் மக்களை குறிப்பாக காயல் நகர வயோதிகர்களை அவதிக்குள்ளாகி வேடிக்கை பார்ப்பது நியாயமா?
வெள்ள நீரை வெளியோற்ற முடியாதா? வழி தெரியாதா?
சென்னை நகரில் வெள்ளம் ஏற்பட்டால் நீரை உறிஞ்சி அருகிலுள்ள பாலத்துக்குக் கீழ் ஓடும் கூவம் ஆற்றில் குழாய் மூலம் திறந்து விடுவார்கள். அது கடலை போய் அடைந்து விடும். தண்ணீர் எடுத்த பின் பள்ளம் இருந்தால் உடைத்த வீடுகட்டிய பழைய கற்களை கொட்டி அதன் மீது மணலும் போடுவார்கள்.
இதே பாணியை இன்று நமதூர் நகராட்சி செய்தால் ஐந்து நிமிடத்தில் தெருக்களில் உள்ள தேங்கிய நீர்கள் குழாய் மூலம் இழுக்கப் பட்டு கடலில் திறந்து விட்டால் ஊரில் பலவாரங்களாக வெள்ள நீர் தேங்கி நிற்குமா? கொசு பண்ணை உற்பத்தியாகி டெங்கு, டைபாய்டு நோய் கிருமி கொசுவும் படைபடையாக ஊர் மக்களை தாக்கவும் செய்யுமா? இதை செய்ய யார் முன் வரப்போகிறார்கள்? அல்லாஹ் தண்டனை அதிகமாக தருவதற்கு முன்பு மக்களை காப்பாற்ற பயந்து உதவிடமுன் வரட்டும் அல்லது ஊர் சேவை பொது அமைப்பினர் ஏன் முன் வரக் கூடாது?
கொட்டிக் கிடக்கும் வெள்ள நீரை சாலையை விட்டு உறிஞ்சும் லாரி மூலம் உறிஞ்சும் வேலையை நமதூர் பொது அமைப்பினர் செய்ய உடனே முன் வந்தால்தான் ஊரிலுள்ள வெள்ளக்காடு நீர் வெளியேற முடியும். அல்லாஹ்வுக்காக பொதுப்பணி செய்து, மக்களையும் - குழந்தைகளையும் நோய்களை விட்டும் தடுக்க முன் வாருங்கள்! இது நீங்கள் ஊருக்கு செய்யும் புனிதப் பணி; முதல் பணி. இப்போது காலம் அறிந்து யாருக்கும் பயப்படாமல் செய்ய முன் வாருங்கள்! நாங்களும் உறுதுணையாய் நிற்போம்!!
[எழுத்துப்பிழை திருத்தப்பட்டது @ 15:54 / 01.12.2015] |
| |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|