செய்தி: மழை வெள்ள நிவாரண உதவிகளை ஒருங்கிணைந்த முறையில் செய்திட “காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரணக் கூட்டமைப்பு” துவக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மர்ஹபா....மாஷா அல்லாஹ் அருமையான முடிவு அமைப்பு posted bymackie noohuthambi (kayalpatnam )[06 December 2015] IP: 116.*.*.* India | Comment Reference Number: 42365
அள்ளித் தந்த வானம்.... அந்த வானத்தை படைத்தது அதன் வழியாக மழை இறக்கிய அல்லாஹ்வுக்குக்கே எல்லா புகழும்.
கெட்டும் பட்டணம் சேர் என்ற பழமொழியை பொய்யாக்கி இந்த ஊருக்கா... சீ இனிமேல் இந்த ஊரில் வசிப்பதா என்று மக்கள் எல்லாம் வெருண்டோடும் காட்சியை நேரில் பார்க்கும் அனுபவம் உம்ராஹ் செல்ல தயாராகி சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வந்த எங்களுக்கு கிடைத்தது.
அல்லாஹ் ''நான் எப்படி எல்லாம் மக்களை சோதித்தேன்'' என்று குர் ஆனில் கூறினேன் நீங்கள் நம்ப தயாராக இல்லை நபிகள் நாயகம் மூலம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்தேன் நீங்கள் அதையும் நம்பத்தயாராக இல்லை. நபி தோழர்கள் வாழ்வின் சம்பவங்கள் மூலம் உணர்வூட்டினேன். அதையும் நீங்கள் அலட்சியம் செய்தீர்கள். இப்போது கண்கூடாக நேரலை நிகழ்ச்சியாக பார்த்தால்தான் நீங்கள் நம்புவீர்கள் என்ற முடிவுக்கு நான் வந்து உங்களுக்கு ''சென்னை''(செவியில் அடிப்பதற்கு சொல்லும் வார்த்தை)யில் அடித்ததுபோல் ஒரு செய்தியை சென்னை நகரை முன்மாதிரியாக்கி காட்டி இருக்கிறேன் இப்போதாவது நம்புகிறீர்களா என் வல்லமையை?
ஆம் அல்லாஹ் இப்போது நம்புகிறோம் .எங்களிடம் கோடிக் கணக்காக பணம் இருந்தது வங்கி கணக்கு வழிந்தோடியது. கையில் நவீன சாதனங்கள், ANDROID செல் போன், மடிக் கணினிகள் கைவசம் உள்ளன. மாடி வீடுகளில் சொகுசாக குடி இருக்கிறோம். இன்னோவா வாகனம் எங்களிடம் இருக்கின்றன....ஆனால் இவை எல்லாம் இருந்தும் ஒரு வேளை சாப்பாட்டுக்கு உணவில்லை...மாற்று துணி இல்லை.பால் இல்லை குடிக்க தண்ணீர் இல்லை மின்சாரம் இல்லை மற்ற பகுதிகளில் இருந்து முற்றிலுமாக துண்டிக்கப் பட்டு இருக்கிறோம்....அல்லாஹு அக்பர்....
இப்போது நம்புகிறோம் இப்போது நீ தான் இவற்றை எல்லாம் ஒரே மழை மூலம் செயலிழக்க செய்து விட்டாய்...மீண்டும் எங்களுக்கு அவற்றை தா..இனிமேல் நீ சொல்லுகிறபடி நாங்கள் கேட்கிறோம் என்று திட சங்கல்பம் கொள்கிறோம்.
இப்படி ஒருங்கிணைத்த அமைப்பு நம்மிடம் நிரந்தரமாக இருக்க வேண்டும் இந்த மழை தந்த பாடம். அல்லாஹ் உங்களுக்கு இந்த உணர்வை தந்து இப்படி ஒரு அமைப்பை ஏற்படுத்த செய்திருக்கிறான். சென்னை மழை தந்த பாடம் இந்த ஊருக்கும் பொருந்தும். கட்டிடங்கள் வீடுகள் எப்படி வடிவமைக்கப் படவேண்டும் . மழை நீர் ஊருக்குள் தேங்காமல் கடலில் கலக்க என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு நாம் இயங்க வேண்டும். நமக்கு அல்லாஹ் பகுத்தறிவை தந்து நல்லதையும் கெட்டதையும் தேர்ந்தெடுக்கும் அறிவையும் தந்து ''சொர்க்கம் நரகம் உங்கள் சாய்ஸ்'' என்று சொல்லி இருக்கிறான்.
இந்த குழுவின் பனி சிறக்க ஊர் திரண்டு ஆதரவு அளிப்போம். அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக . இந்த சீற்றங்கள் நமதூர் பக்கம் நெருங்காமல் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross