Re:... posted byALS Mama (Kayalpatnam)[06 December 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 42368
மனந்திறந்து எழுதிய மழைவெள்ள செய்திக்கு பாராட்டு மழை அளிப்போம்
A.L.S.இப்னு அப்பாஸ்
(இணையதள எழுத்தாளர்> நிரூபர்>
சமூக ஆர்வலர் & ஓவியர்)
காயல்பட்டினம்.
மறந்ததை உணர்த்திய மழை! சகோதரி உம்மு நுமைரா M.A., M.Phil., (Ph.D.,)
காயல்பட்டணம் தைக்கா தெருவைச் சேர்ந்த சகோதரியின் ஆக்கத்தை முதன் முதலில் படித்த போது வெள்ளத் தோடு நானும் இழுத்துச் சென்றது போல உணர்வை ஏற்படுத்தி இருந்தார்.
சுமார் 7 பக்கம் சென்னையின் வெள்ளக் காட்டை படம் பிடித்துக் காட்டினார். இறைவனின் கோபப் பார்வை ஒரு காரணம் என்று ஆலிமாவாக இருப்பதால் அறிந்து தெரிந்து எழுதி மெய்சிலிர்க்க வைத்தார்.
இவர்கள் மகளிர் கல்லூரி ஒன்றில் ஆசிரியை என்றும் அறிந்தேன். இவர்களின் எழுத்தாற்றலில் புதிய பாணி தனி நடை புதுமையாக படிக்கத் தூண்டியது. டிசம்பர் நான்கு தேதி வரை 1428 பேர்கள் படித்து இருப்பதும்> பத்து பேர் கருத்து மழை பொழிந்து இருப்பதும் அறிந்து சந்தோஷப்பட்டதற்கு காரணம் நான் இவர்களை போல கட்டுரையாளர் தான் எனது கட்டுரை டிசம்பர் 2 ல் எழுத்து மேடையில் வெளியாகி உள்ளது.
அது வெள்ளக்காடு காயலைவிட்டு இன்னும் ஏன் வெளியேற வில்லை என்ற தலைப்பில் ஒன்றரை பக்கமாக எழுதியவை இருநாட்களில் படித்தோர் உலகத்தர எண்ணிக்கை 620 க்கும் மேல் இந்த பதில் எழுதுவதற்குப் இன்னும் அதிகமானோர் நமது இணையதளத்தில் படிப்பார்கள் இரண்டு பேர் கருத்து பதிந்து இருந்தார்கள்.
இவர்களைப் போல மழை கட்டுரை என்றதாலும் காயல் தெருக்களில் இன்னும் வெள்ளம் தெருக்களில் ஆறுபோல தேங்கி நிற்பதால் வாகனங்கள் போகும் போது நடந்து செல்லும் மக்கள் ஆடையில் மேனியில் அசுத்த வெள்ள நீர் வாரி வீசப்படுகிறது தவிர்க்க முடியாத நிலையில்தான் இன்னும் கவனிக்கப்படாமல் வெள்ள நீர் தேங்கிய நிலையில் தூங்கிக் கிடக்கிறது. இதனால் மக்கள் உள்ளம் ஏங்கி தவிக்கிறது கவனிக்க யாரும் வரலே ஏன்? நமதூர் கவுன்சிலர்கள் எங்கே போய்விட்டார்கள்.
சென்னை வெள்ளம் குறித்து தொலைகாட்சியில் பலதிக்கிடும் சம்பவங்கள் மக்கள் மனதிலிருந்து இறக்கி வைத்தார்கள். காவிப்படையாம் மோடிப்படையினர் மாட்டிறச்சி சாப்பிடும் முஸ்லீம்களை பாக்கிஸ்தானுக்கு துரத்தி அனுப்ப ஆங்காங்கே கூக்குரல் போட்டது வட மாநிலம் ஒன்றில் மாட்டை வெட்டிய முதியவர் ஒருவரை அநியாயமாக கொன்ற கொடுமையை பிரதமர் கண்டித்தாரா? மௌன சாமியாராகி அவர்பல நாடு சுற்றி பரந்து போனாரே. ஹஜ்பெருநாள் என்பதே குர்பானி என்ற பெயரால் கிடா மாடுகளை பலிஇடும் நாள் தியாகத் திருநாள் இதை காவிப்படை காலித்தனமாக எதிர்த்ததே - இந்த மழை வெள்ள அழிவுக்கு காரணமாக இருக்கலாமோ என்று இந்த நேரத்தில் அப்பாவியும் அறிந்த மக்களும் பேசிகொள்கிறார்கள்.
நாடு எங்கிலும் மாடு வெட்டுவது முஸ்லீம் அவரவர் கேட்பாடு மாடு வெட்டியவனை பாக்கிஸ்தானுக்கு அனுப்ப சொன்ன காவிப்படை கூப்பாடு போட்டது சரியா? முஸ்லீம்கள் பாக்கிஸ்தானில் இருந்தா இந்தியா வந்தார்கள். சென்னையில் காவிப்படையினர் துவேஷ அணியில் முஸ்லீம்களை சாடியவர்கள் இந்த மழை வெள்ளத்தில் பள்ளி வாசலில் மனித நேயத்துடன் தங்கவைத்து உறைவிடம் உணவு உடை கொடுத்து வரவேற்றதாக முஸ்லீம் அல்லாத மக்களே தொலைகாட்சியில் பேட்டி தகவல் சொல்வதை கேட்டு மனித சமுதாயம் மெய் சிலிர்த்து போய்விட்டதை உணர்ந்து கொண்டார்கள்.
இந்தியாவின் ஒருமைபாடு என்பது ஜாதியை குறிப்பிட்டு தனியாக தாக்குவது சரிஅல்ல காவிப்படையின் கொடுமையான வார்த்தையால் முஸ்லீம் மக்கள் இறைவனிடம் கை ஏந்தி பிராத்தனை செய்ததின் விளைவாக சென்னையில் காவிப்படையையும் சூழ்ந்து இழுத்து அடித்து செல்லும் வெள்ளத்தை இறைவன் தந்து விட்டானா? என்று இப்போது மனம் பதைபதைக்கிறார்களாம் யாரையும் தாக்கும் வார்த்தையால் எந்த ஜாதியினரும் மனசும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதை காவிப்படை எனும் காலிப்படை உணர்ந்து கொள்ளட்டும்.
மனித நேயம்தான் இந்திய வளர்ச்சிக்கு ஆன்மீக தன்மைக்கு நல்லது. மழைகாலத்தில் அழகான கருத்தை மின்னல் போல் இடி போல் முழங்கிய கட்டுரையை தந்த சகோதரியை மனதார பாராட்டி வாழ்த்தி போர்வையை போர்த்துவோம் வாரீர்.
இவர்களை போல மற்ற சகோதரிகளும் கட்டுரை பலதரனும். எனது வெள்ளக்காடு கட்டுரை படித்து சகோதரிகள் கருத்து அனுப்புங்கள். எழுத எழுத எழுத்து மின்னும் பிரகாசிக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross