செய்தி: தயவுசெய்து பயன்படுத்தப்பட்ட ஆடைகள் வேண்டாம்! பொதுமக்களுக்கு காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரண கூட்டமைப்பு வேண்டுகோள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பொதுமக்கள் தரும் நல்ல ஆடைகளை ஏற்றுக் கொள்ளுங்கள் posted bymackie noohuthambi (kayalpatnam )[08 December 2015] IP: 116.*.*.* India | Comment Reference Number: 42375
இந்த மாபெரும் பொறுப்பு மிக்க பணியை செய்ய முன்வந்திருக்கும் காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரண கூட்டமைப்புக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.
பொது மக்கள் தரும் ஆடைகள் பயன்படுத்தப் பட்ட ஆடைகளாக இருந்தாலும் இன்னும் அவை பயன்படுத்த லாயக்காக இருந்தால் தயவு செய்து அவற்றையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஏழை மக்களும் இந்த பணிக்கு உதவுவதற்கு ஆசைப்படுவார்கள். எல்லோருமே புதிய துணியாக கடையில் வாங்கி கொடுக்க அவர்கள் பொருளாதார வசதி இல்லாமல் இருக்கலாம். எனவே அவற்றை பெற்றுக் கொண்டால் அவர்கள் முகம் சுளிக்காமல் நாம் கொடுத்ததை ஏற்றுக் கொண்டார்களே, நம்மாலும் இந்த மக்களுக்கு உதவ முடிந்ததே என்று சந்தோசப் படுவார்கள்.
பெண்களுக்கு இது விஷயமாக விழிப்புணர்வு ஏற்படுத்த புதுக் கடை தெருவிலுள்ள எங்கள் வீட்டில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யும்படி இந்த குழுவினரை வேண்டிக் கொள்கிறேன். அதற்காக எனது வீடு ஒன்றை ஒதுக்கி தருகிறேன் என்பதையும் இந்த நல்ல உள்ளம் கொண்ட வெள்ள நிவாரண கூட்டமைப்புக்கு பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இது விளம்பரம் அல்ல நாங்கள் சென்னை சென்று வெள்ளத்தின் கொடூரத்தை கோரத்தை மக்கள் அனுபவித்து வரும் துயரங்களை நேரில் கண்டறிந்து வந்திருப்பதால் ஏற்பட்ட உள்ளத்தின் தாக்கம்.
தி தமிழ் ஹிந்து நாளிதழில் டிசம்பர் 6ம் திகதி 11ம் பக்கத்தில் திரு சமஸ் அவர்கள் இப்படி எழுதுகிறார்..
''பெரு நகர வாசிகள் இதயமற்ற இயந்திரங்கள் எனும் பிம்பம் உண்டு. சென்னைவாசிகள் அதை நொறுக்கித் தள்ளி இருக்கிறார்கள். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்நாள் வரை பொது சமூகம் யாரை அதிக வெறுப்பு உணர்வோடும் கசப்பு உணர்வோடும் பார்த்துக் கடந்ததோ ஒரு வீட்டை வாடகைக்கு விட யோசித்ததோ அந்த இஸ்லாமிய மக்கள்தான் ஓடி ஓடி உதவுவதில் முன்னிலையில் நிற்கிறார்கள்''.
இன்றைய POLYMER NEWS அதை விலாவாரியாக மக்களுக்கு செய்தியாகவும் நிதர்சன நிகழ்ச்சியாகவும் நேரலையில் காட்டியது மனதுக்கு நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் தந்தது.
காயல்பட்டினம் மக்களின் மனித நேயம் உலகெலாம் பேசப்படுகிறது. அல்ஹம்து லில்லாஹ். எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த பயணத்தில் பங்கு கொள்ளும் எல்லோருக்கும் நல்ல உடல் நலத்தையும் நீண்ட ஆயுளையும் பொருளாதார வசதியையும் தந்தருள்வானாக. அமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross