செய்தி: சென்னையில் KCGC மழை வெள்ள நிவாரணப் பணிகள்: 3ஆவது கூட்டம், நிவாரணப் பொருட்கள் வினியோகம் குறித்த விபரங்கள்! 30 சதவிகித பொருட்கள் வினியோகம் நிறைவுற்றது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மனித நேயத்திற்கு மற்றுமொரு சான்று posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[09 December 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 42381
மனிதாபிமானமும்,மனித நேயமும் கைகோர்த்து களத்தில் இறங்கி எந்த ஒரு இன,மத மாட்ச்சிரயத்தையும் தாண்டி, "மனிதன்" மீளாத்துயரில் மிதக்கிறான் அவனை மடிமேலோ முதிகின் மேலோ சுமந்து காப்பாற்றி அவன் கண்ணீரை தற்காலிகமாவது துடைத்துதல் வேண்டும் என்ற தூய எண்ணத்தோடு இறங்கியுள்ள இரக்கமிகு இதயங்களே, நீங்கள் முஸ்லிம்கள்,இந்துக்கள் இன்னும்பல இன,மதத்தை சார்ந்தவர்கள் என்று பார்ப்பதற்கு கூட முடியவில்லை, பார்க்கும் நேரமும் இதுவல்ல.ஆனால் அவர்களின் தூயத் தொண்டுதான் நம் கண் முன்னே தோன்றி,தோன்றி மறைகின்றன!
அவர்கள் ஆவேசமாக ஆர்பரித்து சீறிப்பாய்ந்து செய்கின்ற புண்ணிய காரியங்கள் தான் முதன்மையாக மற்றவர்களுக்கு தெரிகின்றதே தவிர இவன் யார் அவன் யார் என்று தேடும் திடலல்ல அது,தேம்பி தேம்பி அழும் குரல்கள், துணை வருவோர் எவருமில்லையா என்று எல்லையற்ற துயர அபயத்தேடலுக்கு ஓடோடி வந்து உதவும் உத்தமர்களை வகைப்படுத்தும் நேரமும்,இடமுமல்ல அத்தருணம்!
ஆனால்,ஆனால் அதிலும் இஸ்லாமிய பாலகர்கள் முதல், இளைஞர்கள் பெரியோர்கள்வரை தங்களையே அர்பணித்து ஆயிரமாயிரம் உதவிகளை அள்ளித்தந்து கொண்டே இருக்கிறார்களே என்று அடையாளம் காட்டுகிறார்கள் அந்த நன்றியுடைய இளகிய இதயத்தார்கள்.அப்படிப்பட்டவர் களின் நன்றியொலி நகரெங்கும் ஒலித்ததால் தான் அனைத்து நாளேடுகள் முதல் நடமாடும் மீடியாக்கள்வரை முஸ்லிம்களை மிகைப்படுத்துகின்றன. உண்மைகளை ஒருசில மணிநேரங்கள், ஒருசில நாட்களுக்குமட்டும் தான் மூடிமறைக்க முடியும்!
எங்களினிய மாற்றுமத இதயங்களே இப்படிப்பட்ட இயற்கை சீற்றத்தின் இன்னலின் கோரப்பிடியிலிருப்பவர்களுக்கு உதவ வேண்டும் என்று எங்களூரார்கள் மட்டும் சொல்லவில்லை, எங்கள் உறவினர்கள் நண்பர்கள் மட்டும் சொல்லவில்லை எங்கள் உயிரினும் மேலான புனித மார்க்கத்தின் புண்ணிய நபியின் கட்டளை, அந்த மார்க்கதிற்க்காக எங்கள் ஆயுள் முழுவதையும் அர்பணிக்க தயாராக இருக்கும் எங்களுக்கு இந்த உதவிகளெல்லாம் ஒரு தூசி,தூசி,துரும்பே தான்!
வெள்ளத்தால் தப்பி பிழைத்து தஞ்சமடைந்த ஒரு மாற்றுமத சகோதரர் சொன்னாராம் இனி வரும் காலங்களில் பாபரி மசூதி போன்று ஒன்று இருந்து அதை இடிக்கவேண்டும் என்று எண்ணமிருந்தால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள் மிருக குண மனிதனே,ஏனெனில் ஒருவேளை எதிர்காலத்தில் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு,இயற்கை சீற்றம் ஏற்பட்டால், எங்களுக்கு இருக்க இடம்,உண்ண உணவை பெற முடியாத ஒரு இடத்தை இழந்த நஷ்டவாளியாக ஆகிவிடுவோம் என்றாராம்!
இதை இன்னும் இன்னும் சத்தமாக சொல்லுங்கள் எங்களின் உடன்பிறவா சகோதரர்களே!உங்கள் குரோலோசை தலைநகர் வரை பலஆயிரமைல்கப்பாலும்ஒலிக்கவேண்டும்
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross