சுத்தம்செய்து களையெடுக்கப்படவேண்டிய ஆறு posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[13 December 2015] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42403
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
இறையருள் நிறைக.
நமதூரை அடுத்துள்ள வடதென் ஆத்தூரில் ஆற்றில் நீரோட்டத்தை வழிமறித்து வளர்ந்து, வளைத்துள்ள,முட்புதர்,நீர்த்தாமரை,காட்டுச்செடிகொடிகள்,குப்பைகூளங்க்கள்,இன்னும் பிளாஸ்டிக் பை,பொருட்கள் அனைத்தையும் களையெடுத்து ஆழமாக்கி ஆற்றின் இருஓரங்களுட்பட வழியேற்படுத்தி, நீர்தெளிவாக வேகமாக கடல்நோக்கிச்செல்ல வழியேற்படுத்தப்படவேண்டும்.
ஆற்றையடுத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குடியிருப்புகளை அகற்றவேண்டும் குடிநீர் உறிஞ்சப்படும் படுக்கையின் பழைய வடிகட்டிகளை அகற்றிவிட்டு புதிய படுக்கையமைக்கப்படவேண்டும்.
சுகாதரமாக வாழவும்,தூய்மையான குடிநீர்கிடைக்கவும் வெள்ள அபாயங்க்களைலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் இந்தப்பணிகளை மக்களின் பாதுகாப்பிற்காக அரசும்,ஆத்தூர்நகராட்சியால் தீவிரமாக முடுக்கிவிடப்படவேண்டும்
இப்பொழுது ஒரு எச்சரிக்கைமணியடிக்கப்பட்டுள்ளது.
ஆத்தூரின் வரலாற்றில் நமக்குத்தெரிந்து ஒருபேரிடரை சந்தித்துள்ளது வல்ல இறைவன் பாதுகாப்பானாக அதுபோல் சம்பவிக்காமலிருக்க ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross