செய்தி: கடலூர் மழை வெள்ள நிவாரணத்திற்காக ரூ. 30 லட்சம் வரை சேகரம்! பாதிக்கப்பட்டோருக்கு டிச. 15 அன்று நேரில் வினியோகித்து களப்பணியாற்றிட முடிவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:.. நேரத்தை ஒதுக்குவது என்பதே பெரிய விஷயம் அல்ஹம்து லில்லாஹ்... posted bymackie noohuthambi (kayalpatnam )[13 December 2015] IP: 116.*.*.* India | Comment Reference Number: 42407
கணினி ஜாம்பவான் என்று சொல்லப்படும் BILL GATES தனது கணினி வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அவர் கைக்குட்டை கை தவறி கீழே விழுந்து விட்டதாம். அவர் குனிந்து அதை எடுக்கும் நேரத்தில் 500 US டாலர் சம்பாத்தியத்தை இழந்து விடுவாராம். அவ்வளவு பிஸி. அதை நேற்றுவரை நம்ப முடியாமல் இருந்தது.
ஆனால் வெள்ள நிவாரண பணியில் தங்களை இணைத்துக்கொண்டு தெரு தெருவாக அலைந்து திரிந்தவர்கள் அதுவும் கொட்டும் மழையில் வீடு வீடாக சென்று வசூல் செய்த பிரமுகர்கள் வெறும் சாதரணமானவர்கள் அல்ல.
தொழில் அதிபர்கள் குளிரூட்டப்பட்ட அறைகளில் கணினி முன்னால் இருந்து அன்றாட வரவு செலவுகளை பல லட்சம் ரூபாய் வருமானங்களை கணக்கு பார்த்துக் கொண்டிருப்பவர்கள், ஊழியர்களுக்கு வேண்டிய வழிகாட்டு முறைகளை ஆணைகளை பிறப்பித்துக் கொண்டிருப்பவர்கள். இவர்கள் நினைத்திருந்தால் சில லட்சங்களை வெள்ள நிவாரண நிதியாக அனுப்பி விட்டு அவரவர்கள் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம்.. ஆனால் அவர்கள் எல்லாம் நேரத்தை ஒதுக்கி களப் பணியில் ஈடுபட்டதை நேரில் பார்த்த எனக்கு மெய் சிலிர்த்தது.
நமக்கு இவர்களுடன் வெளியில் அலைந்து திரிய உடல்நலம் இடம் தரவில்லையே என்ற ஆதங்கம் ஏற்பட்டது.
30 லட்சம் பல ஆயிரக்கணக்கான ரூபாய் பெறுமதியான ஆடைகள் எல்லாம் நிறைந்து வழிவதை நிழல் படமாக பார்க்கும்போது நமதூர் மக்களின் வள்ளல்தன்மை இயற்கையானது.
பல்லாண்டு காலங்களுக்கு முன்னால் வாழ்ந்த சீதக்காதி வள்ளலை பற்றி படித்திருக்கிறோம் . இன்று நிதர்சனமாக அவர்களை காண்கிறோம் . அல்ஹம்து லில்லாஹ். சீதக்காதி பணத்தை மட்டும்தான் அள்ளிக் கொடுத்தார்கள். தெரு தெருவாக அலைந்து தங்கள் பொன்னான நேரத்தை கொடுத்ததாக தகவல் இல்லை .எனவே இவர்கள் எல்லாம் வள்ளல் சீதக்காதியைவிட உயர்ந்தவர்கள் .
நான் நோயுற்றிருந்தேன் என்னை நீ வந்து பார்த்து நலம் விஜாரித்தாயா...நான் தாகித்து இருந்தேன் எனக்கு தாகம் தீர தண்ணீர் தந்தாயா நான் பசியாக இருந்தேன் எனக்கு உணவு தந்தாயா நான் ஆடை இல்லாமல் இருந்தேன் நீ எனக்கு ஆடை தந்தாயா என்று மறுமை நாளில் அல்லாஹ் கேட்பானே அப்போது இவர்கள் எல்லாம் ஆம் சென்னையிலே கடலூரிலே நாங்கள் மக்கள் துயரங்களை துடைத்தோம் என்று தோளை உயர்த்தி சொல்வார்கள் அல்லாஹ் மகிழ்ச்சியடைந்து இவர்களை சொர்க்கத்துக்கு அவர்கள் விரும்பும் தலைவாசல் வழியாக உள்ளே செல்லும்படி சொல்வான் இன்ஷா அல்லாஹ்.
இந்த புனித பயணத்தில் செல்பவர்கள் எல்லோருக்கும் அல்லாஹ் நீண்ட ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தையும் போகும் வழிகளில் பயமின்மையையும் கொடுத்து அவர்கள் பொருளாதாரத்திலும் நல் அபிவிருத்தியை கொடுப்பானாக என்று உளமார பிரார்த்திக்கிறேன்.
சென்று வாருங்கள். ஏழை மக்களின் உள்ளங்களை
வென்று வாருங்கள்.அல்லாஹ்வின் அருளை
கொண்டு வாருங்கள்.
நாம் பாடுபட்டு சேர்த்த பொருளை கொடுக்கும்போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தை பார்க்கும்போதும் இன்பம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross