posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[15 December 2015] IP: 37.*.*.* | Comment Reference Number: 42417
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
இறையருள் நிறைக.
நம் சுற்றுச்சூசலோடு நாம் உரையாடிக்கொன்றுக்கும்போது நம்மோடுடிருக்கும் குழந்தைகளுக்குமத்தியில் நாம்,நாமென்பதைவிட்டுவிட்டு பகிர்ந்துகொள்ளும்விஷயங்கள் எப்படியோ அதன்படியே குழந்தைகள் பிரதிபலிக்கும் என்பது மறைந்து நான் நீ அவன்/அவள் என்று ஆகும் போது குழந்தைகளும் தான் என்ற ஒருஉலகத்தை நாடுகிறது அப்பொழுது உறவுகளை உலகத்திற்குத்தகுந்தார் போல் தன்னைமாற்றிக்கொள்கிறது அதாவது நமக்குப்பழகிய அழகுதமிழ் உறவுச்சொற்கள் கொடியறுந்து கொக்கியில் ஒற்றைப்படையில் தொங்குகிறது அதாவது நீங்கள் (ஆசிரியை) குறிப்பிட்டுள்ளது போல் மும்மி,டாடி,அங்கிள்,ஆண்ட்டி ஈ ஆகிவிடுகிறது.
சமூகமே உலகைத்தனக்குத்தகுந்தாற்போல் வளைத்துக்கொள்கிறது உலகம் சமூகத்தை வளைப்பதில்லை,முகமன்கள் வெறும் பெரும்பாலும் முகஸ்துதியாகிவருகிறது என்பதை மறுப்பதற்கில்லை
ஜீன்களில் மாற்றம்வருவதில்லை ஆனால் ஜெனரேசனில் ஏன்மாற்றம்வருகிறது .எல்லாம் அறிவியலாளர்கள் புதுப்புதுகண்டுபிடிப்புகளென்று தம்மைவெளிப்படுத்திக்கொள்ள
Genx,GenY,Genz என்று வரிசைப்படுத்தி பிரிக்கிறார்கள் இன்னும் பிரிக்கவிருக்கிறார்கள் Alphas,BetaS,GamaS
என்று பிரித்துக்கொண்டேபோவார்கள்
இறைவன் சொல்கிறான் உங்களை நாம் ஒரே உடலிலிருந்து படைத்தோம்
இறைவன்படைத்த ஒன்றை மனிதன் பிரிக்கும்போது பலப்பலவிஷங்கள் மறைந்துகொண்டேபோகின்றன அறிவியல் வளர்ச்சிதேவைதான் நம்மைஅடகுவைக்குமளவிற்கல்ல
ஒரு ஆற்றைக்கடக்க படகிலும் பயணிக்கலாம் பாலத்தின்மேலிருந்தும்கடக்கலாம் காலவித்தியாசமிருக்கலாம் ஆனால் கடப்பது ஆற்றைத்தான் செவ்வாய்க்கிரகத்தையல்ல
நமது பள்ளிக்கல்விப்பாடங்களில் அன்பு என்ற ஒரு தனிப்பாடத்தை ஆரம்பபக்கல்வியிலிருந்து எத்தனை உயர்கல்விக்குச்சென்றாலும் அன்பு என்ற பாடத்தின் தொடர்ச்சியிருந்துகொண்டேயிருக்கவேண்டும் அப்பொழுதுதான் சமூகப்பினைப்பும் உறவுகளும் உயிரோடுவாழும். உதாரணத்திற்கு சென்னையின் மழைப்பேரிடர் சம்பவம் உலகம் சமூக உறவுகளை உற்றுனோக்கவைத்தது நமக்குள் எத்தனை சுமூகத்தை உண்டாக்கியது அல்ஹம்துலில்லாஹ்.
ஏ பார் ஆப்பிள் என்று இருக்கிறது,
அ என்றால் அன்பு என்று இல்லை
"மறைந்த நம் முன்னாள் குடியரசுத்தலைவர் அறிவியலறிஞர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் தனது அக்னிச்சிறகில் இப்படிச்சொல்லியிருக்கிறார் நீங்கள் நல்ல அறிவுசார்ந்த நூல்களைத்தேர்ந்தெடுத்துப்படித்துவந்தால் சில ஆண்டுகளில் ஒரு அறிவாலியாகிவிடமுடியுமென்று" ஆனால் அது உலக அறிவுசார்ந்ததாக மட்டுமிருந்து பயனில்லை அதில் இறையாண்மையும்,வலுவான அறநெறிகளும் அன்பும் மலிந்திருக்கவேண்டும் என்பது எனது கருத்து..
அறிவியல் உலகின் தந்தைஎனப்படும் ஐன்ஸ்டீன் சொன்னார் ஜெர்மானியர்கள் அனுகுண்டைதயாரிப்பதற்குமுன் நாம் தயாரித்துவிடவென்டுமென்று அமரிக்க அரசைத்தூண்டினார் இதில் இறையாண்மை எங்கே இருக்கிறது அவர் இப்படிச்சொல்லியிருக்கவேண்டும் உலகத்தை பேரழிவிலிருந்து நாம் பாதுகாக்கவேண்டும் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும்.
மாஷா அல்லாஹ் ஆசிரியர் உம்மு நுமைரா M.A., M.Phil., (P.hD.)] அவர்கள் மிக அழகிய எளிய நடையில் கட்டுரையைதொய்வில்லாமல் தந்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள் தனது பில்லைகளைவைத்தே அவர்களின் அனுகுமுறைகளைக்கொண்டே அழகுபடுத்தியிருக்கிறார் மப்ரூக் உங்களிடம் இன்னும் இதுபோன்ற நல்ல படைப்புகளை எதிர்பார்ப்பவனாக இன்ஷா அல்லாஹ்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross