Re:...கண்ணை இமை காப்பதுபோல் .. posted bymackie noohuthambi (kayalpatnam )[16 December 2015] IP: 116.*.*.* India | Comment Reference Number: 42445
சகோதரர் சிராஜுதீன் அவர்களின் திடீர் மறைவு செய்தி மனதுக்கு வருத்தம் தருகிறது.
அவரை கண்ணை இமை காப்பது போல் அவரது சுகத்திலும் சோகத்திலும் இன்பத்திலும் துன்பத்திலும் அவருக்கு ஆறுதலாக இருந்து எல்லா உதவிகளையும் செய்து வந்த நண்பர் ஆரிப் அவர்களுக்கு சிராஜ் அவர்களின் வபாத் செய்தி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. கொழும்பிலே அவர்கள் இருக்கும் இருப்பிடத்தையும் தொழிலில் அவர்கள் இணைந்து பணியாற்றும் நிலையையும் நான் கண்கூடாக கண்டவன். தேறுதல் சொல்வதற்கும் ஆறுதல் சொல்வதற்கும் வார்த்தைகள் இல்லை.
ஆனாலும் அல்லாஹ்வையும் அவனது களா கத்ரையும் நம்பும் எல்லோரும் இந்த இழப்பை தாங்கி கொண்டு பொறுமை காத்து அல்லாஹ்விடம் மறைந்த சகோதரருக்காக து ஆ கேட்பதொன்றே நமக்கு நபிகள் நாயகம் அவர்கள் காட்டி தந்த வழி முறை. ALLAAHUMMAGHFIR LAHOO VARHAMHOO ....
எல்லாம் வல்லா அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை பொருந்திக் கொள்வானான. அவரது பாவங்களை பொறுத்துக் கொள்வானாக அவரது மண்ணறையை வெளிச்சமானதாகவும் விசாலமானதாகவும் ஆக்கி வைப்பானாக. அவருக்கு மேலான சுவர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக. அவரது தாயாருக்கும் சகோதரிக்கும் அவரை கண் இமைபோல் காத்து வந்த நண்பர் ஆரிப் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் பொறுமையை கொடுத்தருள்வானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross