காவல் நிலையம் இல்லாத ஊர் திரை அரங்கு இல்லாத ஊர் மதுக் கடை இல்லாத ஊர் என்று பெருமை பேசிக் கொள்கிறோம். தமிழகத்தின் இஸ்லாமிய தலைநகர் என்று மார் தட்டிக் கொள்கிறோம்.
முஸ்லிம்களே இந்த அசிங்கமான அவமானமான சூதாட்டத்தில் ஈடுபட்டார்கள் காவல் துறை கைது செய்தது என்ற செய்தி உலகம் முழுவதும் காயலர்கள் வாழும் எல்லா இடங்களுக்கும் சென்று அடைந்திருக்கிறது.
அப்படியானால் மது அருந்துதல் விபச்சாரம் கூட இங்கு மறைமுகமாக நடக்க வாய்ப்பு உள்ளது என்று யார் நினைத்தாலும் அது தவறு என்று நாம் மறுத்து பேச முடியாது. வெட்கம் அவமானம் நாம் தலை குனிந்து நிற்கிறோம்.... என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
நமது உலமாக்கள் எதிர்வரும் வெள்ளிக் கிழமை ஜும் ஆ பிரசங்கத்தில் இதை வெளிப்படையாக பேசி கண்டனம் தெரிவிக்க வேண்டும். நாட்டில் மழை வெள்ளம் ஏற்பட்டு நிலை குலைந்து நிற்கும் போது பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிய முஸ்லிம் சமுதாயமா இந்த ஈன செயலையும் செய்கிறது என்று மாற்று மதத்தவர்கள் காறி உமிழும் அளவுக்கு கீழ் தரமான நிகழ்வு காயல்பட்டினத்தில் நடந்திருப்பது மனதுக்கு பெரும் அதிர்ச்சியை தருகிறது. அல்லாஹ்வின் கோபப் பார்வை நம்மீது இறங்காமல் அல்லாஹ் பாதுகாப்பானாக. இவர்களின் செயலால் ஒட்டுமொத்த மக்களையுமே அல்லாஹ் சோதித்து விடக் கூடாது.
''அநியாயம் அட்டூழியம் நடக்கும்போது நல்லவர்களையும் அது பாதிக்குமா'' என்று நபிகள் நாயகம் அவர்களிடம் நபி தோழர்கள் கேட்டபோது ''ஆம் அநியாயம் அட்டூழியம் மிகைத்து விட்டால் - அதை பார்த்துக் கொண்டு நமக்கென்ன வந்ததென்று நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்தால்....உங்களையும் அந்த சோதனை விட்டு விடாது என்ற கருத்துப் பட உள்ளா ஹதீத்களை நமது உலமாக்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அல்லாஹ் பாதுகாப்பானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross