உலகும் உலகியலும் posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[17 December 2015] IP: 5.*.*.* | Comment Reference Number: 42465
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
இறையருள் நிறைக.
மருத்துவர் புகைப்பிடிப்பார் ஆனால் நோயாளிகளுக்கு புகைப்பிடிக்கக்கூடாதென்று அறிவுரைசொல்வார் புகைபபிடிப்பவர்களில் ஆக்டிவ் ஸ்மோக்கரைவிட பாஸ்ஸிவ் ஸ்மோக்கராலயே அதிகம்பாதிப்பு ஏற்படும் இதுமருத்துவரின் சுயநலம்
அதுபோல பெரும்பாலும் மேலையநாடுகள் ஊதித்தள்ளும் நச்சுத்தன்மையே உலகை பிழிந்துஎடுக்கிறது எடுக்கிறது இன்னும் கீழைய நாடுகளை தமது ஆதிக்கசக்தியால் பெரும்தொழிற்சாலைகளைநிறுவ நசுக்குவதாலுமே இயற்கைச்சீற்றங்கள் ஆக்ரோசமாக நிகழ்கின்றன
நமது ஊரில் கொலுஞ்சுச்செடிகள் அதிகமாகக்காணப்பட்டன அந்தச்செடியில் நல்லதாய்மை உணர்வுஉண்டு அதை தென்னைமரத்தின் ஓலைகளில் பாலைகளோடு இணைத்துவைப்பார்கள் பாலைகளுதிராமலிருக்கவும் காய்கள் நன்றாக புஷ்டியாக காய்க்கவும் இந்தச்செடிஉதவும் அதுபோல் பனைமரம் இன்னும் எத்தனையோ தாவரங்கள் அழிந்துவருகின்றன
பறவையினங்களில் எத்தனையோ இடம்பெயர்ந்துவிட்டன அல்லது அழிந்துவிட்டன
((நாம் செய்த பாவங்களுக்கு இறைவனிடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும். குற்றங்கள், பாவங்களைக் கைவிட வேண்டும். இறையை வழிபட்டு, அவனிடம் வேண்ட வேண்டும். சக மனிதர்களின் உரிமையைக் காக்க வேண்டும். நம்மால் யாருக்கும் தீங்கு நேராமல் நடந்துகொள்ள வேண்டும். தர்மம் செய்ய வேண்டும். உறவுகளை மதிக்க வேண்டும். பெற்றோரைப் பேண வேண்டும். ஏழை எளியோர்மீது இரக்கம் காட்ட வேண்டும். தனிமனித ஒழுக்கம் பேண வேண்டும். தவறுகள், குற்றங்கள்மீது அறச்சீற்றம் கொள்ள வேண்டும். மொத்தத்தில் நல்ல மனிதனாக வாழ வேண்டும்.
இதன்மூலம், இறைவன் நம்மைப் பேரழிவுகளிலிருந்தும், பேரிடர்களிலிருந்தும் காப்பான் !))
ஆசிரியர் மவ்லவீ அ. முஹம்மது கான் பாகவி நல்லதகவல்கள் தந்திருக்கிறார்கள் செயல்வடிவத்திற்குவந்தால் புவிபயனுறும் புவியும் பயன்தரும் இல்லையெனில் நிச்சயமாக பயத்துடன் அழிவுதரும் என்று ஆங்காங்கே நிகழ்த்திவருகிரதேன்பதை நிதர்சனஉண்மையாகக்காண்கிறோம்.
மனிதனின் அறியாமையால் இயற்கையை தனக்குச்சாதகமாக வளைக்க நினைக்கிறான் பாவம் இயற்கை அவனை வளைத்துவிடுகிறது.
மகிழுந்துகளுக்கும்,மற்றும் மோட்டோர்வாகனங்களின் உரிமையாளருமான தொழிலதபர் ஹென்ரிஃபோடர்டை யாரும் அவருடைய தொழிலோடு எதிர்த்து ஜெயிக்கமுடியாதாம் ஆனால் அவருடன் இணைந்துசெயல்பட்டால் தொழிலில்வெற்றியும் முன்னேற்றமும் அடையலாமாம்.
ஒருதனிமனிதனுக்கே கொடுப்பினைகள் இப்படியென்றால்.
இயற்கை எப்படிப்பட்டது?
இயற்கையை எதிர்கொள்ளமுடியாது இயற்கையை ஒன்றிப்போகலாம் அதனுடைய இறையான்மைக்கு தீங்குவராமல் இறையாண்மையோடு செயல்பட்டால் உலகநியதி நிலைக்கும் இல்லையெனில் கலகம் விளைவிக்கும் இறைவன் மனிதமனங்களில் நல்லெண்ணங்க்கலைவிளைவித்து இந்த உலகைபேஅழிவுகளிலிருந்துகாப்பானாக ஆமீன்.
ஆன்மீகம்,மெய்ஞானம்,விஞ்ஞானம் முன்ஞானமும்கலந்த நல்லதோர் அறிவுசார் கலவைகட்டுரைக்களஞ்சியம் ஆசிரியர் அவர்களுக்கு மிக்கநன்றியுடன் துஆக்களும் வல்ல இறைவன் நல்ல ஆரோக்கியத்துடன் எல்லாநலவளங்களுடன் மென்மேலும் இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான பதிவுகள்தரும் ஆற்றலையும்தந்து இருலோகவெற்றியையும் தந்தருள்வானாக ஆமீன் ஜஃஜாக்கல்லாஹ் க்ஹைரன்லகும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross