செய்தி: கழிப்பறைகள் அமைத்திட - மானியமாக தலா 4000 ரூபாய் - மத்திய அரசு, காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கியது! தமிழகம் முழுவதும் ஒதுக்கப்பட்டுள்ள மானியம் விபரம் இணைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...MILLION DOLLAR QUESTION posted bymackie noohuthambi (kayalpatnam )[20 December 2015] IP: 116.*.*.* India | Comment Reference Number: 42501
சில புரியாத புதிருக்கு - நடை முறை சாத்தியமா என்று சந்தேகம் வரும் விஷயயங்களுக்கு ஆங்கிலத்திலே MILLION DOLLAR QUESTION என்று சொல்வது வழக்கத்தில் உள்ளது.
ஒரு கழிப்பறை கட்ட 4000 ரூபாய்தான் செலவாகும் என்று எந்த அடிப்படையில் கணக்கு பார்த்திருக்கிறது அரசு என்று தெரியவில்லை. 75 கழிப்பிடங்கள் காயல்பட்டினத்தில் மட்டும் - அது எங்கெங்கே கட்டப் படவேண்டும் என்று நகர்மன்றம் கூடி முடிவெடுக்க வேண்டும் இதற்கு டெண்டர் கொடுக்க வேண்டும்...இப்படி பல விஷயங்கள் இருக்கிறது.
ஏற்கெனவே டெண்டர் கொடுக்கப்பட்ட விஷயங்களில் கருத்து வேற்றுமை ஏற்பட்டதால் திரும்பவும் டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது அப்படி டெண்டர் கொடுக்கப்பட்டு சம்மதம் தெரிவிக்கப் பட்ட விஷயங்கள் இன்னும் நடை முறைப் படுத்தப்படாமல் செயல்வடிவம் கொடுக்கப் படாமல் இருக்கிறது என்பது ஊரறிந்த விஷயம்.
ஒழுங்காக முறையாக இயங்கும் ஒரு நகர்மன்றம்தான் - மக்கள் நலம் ஒன்றே குறிக் கோளாகக் கொண்ட நகர்மன்ற தலைவர் - நகர்மன்ற உறுப்பினர்கள் - அதிகாரிகள் - டெண்டர் எடுப்பவர்கள் - இப்படிப் பட்டவர்கள் ஒன்று சேர்ந்து செய்தால்தான் இந்த திட்டம் செயல்வடிவம் பெறும்.
வெற்று தாளில் சீனி சர்க்கரை தேன் என்று எழுதி நாக்கினால் நாக்கினால் இனிக்குமா? எனவே இந்த சந்தேகங்களை தீர்க்க சம்பந்தப் பட்டவர்கள் முன் வரவேண்டும்.
என்ன இது அபசகுனம் மாதிரி பேசுகிறானே எழுதுகிறானே என்று யாரும் நினைக்க வேண்டாம். நிதர்சன உண்மைகள் கண்ணுக்கு தெரிகின்றன. எல்லாம் நல்லபடி நடக்க அல்லாஹ்வை பிரார்த்திப்போம்...
SEE THE WRITING ON THE WALL ..IT IS A MILLION DOLLAR QUESTION
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross