நமது ஊரைப்பொருத்தவரைமட்டுமல்ல பல ஊர்களில் மழைகாலங்களில் இதேதுர்நாற்ற நிலைதான் எந்தமாற்றமும்காணவில்லை.
ஒரு வீடு கட்டி ஒரு தம்பதி திருமணம் செய்து அவர்கள் குழந்தை பெற்று அக்குழந்தைகள் வயது எய் முன்னே அந்த வீட்டிற்கு ஏறி வரும்படிகள் ஏரிகள் வரும்படியாகி விடுகிறது பலமுறை நாம் இந்நிலையைசந்தித்தும் இன்னலுற்றும் நமக்கு விமோச்சனம்வேண்டுமென்ற ஒருசிந்தனை வரவில்லை.
இளமையைத் தொலைத்து, கஷ்டங்களைசுமந்து அதை இதைவிற்று, அவமானப்பட்டு லட்சியங்க்களைவிட்டு எப்படியோ பல லட்சங்களை சேர்த்து வீடுகட்டுகிறோம். ஆனால் அதற்கு அஸ்திவாரம் ஒரு ஐம்பது ஆண்டுகளுக்குக்கூட உறுதியாக தீர்மானிக்கமுடியவில்லை எல்லாம் திட்டமில்லாத சாலைப்பணிகளின் விதிப்படியே நமதுதிட்டங்கள்தகர்க்கப்படுகிறது. தேர்தல்காலங்களில் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கிறோம் தேர்ந்து எடுக்கிறோமா?
சென்னை நமக்கு நல்ல பாடத்தைக்கற்றுத்தந்திருக்கிறது அல்லாஹ் காப்பற்றவேண்டும் அந்த நிலை நமதூரல்ல இனி எந்த ஊருக்கும் வந்துவிடக்கூடாது.
நகராட்சியில் உறுப்பினர்களாக்கிவிடப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் சொல்வீச்சால் பூமரேங்க் விட்டுக்கொண்டிருக்கிறார்கள் அவர்களின் சுயநலத்தில் மட்டுமே குறிக்கோளாக இருக்கிறார்கள். எல்லாம் நமதுஅறியாமையே. வரும்பக்கவிளைவுகளுக்கு தகுந்த தீர்வுகாணாதும்,எதிர்க்காது புழுக்களைப்போல்வாழ்வை அமைத்துக்கொண்டதுமேகாரணம் .
இனி வரும் காலங்களில் சென்னையை எப்படி தன்னார்வ அமைப்புகளாக கூடிமீட்டெடுத்ததோமோ அதுபோல நமது ஊரிலும் இறங்கி செயல்படவேண்டிவருமோ? இறைவன் காப்பாற்றவேண்டும்,
ஒருமுறை பிழையாகிவிட்டால் அதுதவறு மீண்டும் தொடர்ந்தால் அதுதப்பு தெரியாமல் நிகழ்ந்துவிடுவது தவறு தெரிந்தே நடந்தால் அது தப்பு.
எஸ்.கே. சாலிஹ் வீட்டிற்குள் புகுந்து விட்ட கழிவுநீர் நம்வீட்டிற்குள்ளும் வரநேரமாகாது வல்ல இறைவன் எல்லோருக்கும் விமோச்சனம் தரவேண்டும் எல்லாவற்றிற்கும் மேலாக நல்லெண்ணமும் முயற்சிவேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross