செய்தி: தமிழ்நாடு தௌஹீது ஜமாஅத், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் தன்னை சந்தித்தது குறித்து நகர்மன்றத் தலைவர் அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...100 சதா வீதம் நல்லவர்கள் உலகில் இரண்டு பேர்தான்,,, posted bymackie noohuthambi (kayalpatnam )[21 December 2015] IP: 101.*.*.* India | Comment Reference Number: 42515
100 சத வீதம் நல்லவர்கள் உலகில் இரண்டு பேர்தான் ஒருவர் இறந்து விட்டார் இன்னொருவர் இன்னும் பிறக்கவில்லை என்ற செய்தி நேற்று முன்தினம் ஒரு பத்திரிக்கையில் படித்தேன்.அது தவறென்று தெரிகிறது.
நமது நகரமன்ற தலைவி அவர்களின் ஆதங்கம் உணர்வுகள் புரிகிறது. அவர்கள் நல்லெண்ணத்துக்கு அல்லாஹ் நற் கூலி கொடுப்பான்.
ஆனால் நமது நாடு ஒரு ஜனநாயக நாடு. நம் கண் முன்னால் ஒரு கொலையை செய்தவனை நாம் உடனே கொலை செய்ய முடியாது. சட்டத்தின் முன் நிறுத்தி சாட்சிகள், நீதிமன்றங்கள் கீழ் கோர்ட்டு மேல் கோர்ட்டு உச்ச நீதிமன்றம் வரை அந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு 24 வருடங்களுக்கு பிறகு அந்த குற்றவாளி நிரபராதி என்றோ குற்றவாளி என்றோ விடுதலை செய்யப் படுகிறான் அல்லது தண்டனை அளிக்கப் படுகிறான். இது இந்த நாட்டு நடப்பு.
நேற்று நிற்பா என்ற பெண்ணை கற்பழித்தவன் சிறுவன் (18 வயது?)என்று விடுவிக்கப் பட்டுள்ளான். தமிழக முன்னாள் முதல்வர் இந்நாள் முதல்வர் (நீங்கள் அந்த முதல்வரின் கட்சியில் ஒரு முக்கிய பிரமுகர்) என்பது வேறு விஷயம்.முன்னாள் பிரதமர்கள் இந்நாள் பிரதமர் உட்பட ஏதாவது வகையில் ஒரு ஊழல் செய்திருப்பதாக அன்றாட உடகங்களில் நாடாளு மன்றங்களில் விவாதங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஒரு குடுவையிலிருந்து ஒரு குவளைக்குள் நீரை ஊற்றினேன் அது அழுக்காக இருந்தது மீண்டும் ஊற்றினேன் மீண்டும் அழுக்கு. உற்றுப் பார்த்தேன். குடுவையில் உள்ள நீரே அழுக்கு....இதுதான் நமது நாட்டின் ஆளுமைகள்.
சிங்கப்பூரில் லஞ்சம் கொடுப்பது பெரிய குற்றம் மக்களும் அதை பெரும் பாவம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இங்கு இலவசம், விலை இல்லாப் பொருள்கள், மானியம் என்ற பெயரால் லஞ்சங்கள் தாராளமாக உலா வருகின்றன. தேர்தல் சமயங்களில் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பணம் வழங்குவதை வானளாவிய அதிகாரம் படைத்த தேர்தல் கமிஷன் தடை செய்ய முடியவில்லை. கேட்டால் அவர்களை கையும் களவுமாக பிடித்தாலும் உடனடியாக தண்டனை வழங்க சட்டத்தில் இடமில்லை என்கிறார்கள்.நீரே அழுக்கு என்பது போல் இங்கு சட்டமே அழுக்கு .
நகர்மன்ற தலைவியிடம் ஊழல்களை கண்டும் காணாமல் இருந்து கொள்ளுங்கள் விஷயம் நடந்தால் சரிதான் என்று யார் சொன்னார்கள் என்று இங்கு அவர்கள் சொல்லவில்லை. இருந்தாலும் அனுபவ பட்டவர்கள் முன்பு ஆட்சி செய்தவர்கள் அதை சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
நாலரை ஆண்டு காலம் முடிந்து விட்டது. இன்னும் சில மாதங்கள் உங்கள் ஆட்சி இருக்கும். மக்கள் RESULT டை எதிர்பார்க்கிறார்கள்.
நேரு அவர்கள் சொன்னார்கள். I DON 'T WANT TO LISTEN TO YOUR EXCUSES BUT I NEED RESULTS.
நீங்கள் ஆட்சியில் இருந்து இறங்கும்போது உங்கள் RESULT ''NIL '' என்று வரும் காரணம் உங்கள் கரங்கள் ''WHITE '' என்று நீங்கள் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.. அப்படியானால் இப்போதுள்ள சாலைகள் இப்படியே இருக்கும் நிர்வாகம் தொடர்ந்து தேக்க நிலையிலேயே இருக்கும் என்பதுதான் அர்த்தம்.
உங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய நீங்கள் தயாரில்லை. மக்களும் இன்னல்களை தாங்கி கொள்ள இனியும் தயாராக இல்லை.
முஸ்லிம் லீக் ஒரு நூற்றாண்டை தாண்டிய தேசிய கட்சி. தவ்ஹீத் ஜமாஅத் இளைஞர்கள் ஆர்த்து எழுந்து சேவைகள் செய்யும் சிறிய கட்சி. ஆனால் இவை இரண்டும் இந்த மழை வெள்ளம் காலங்களில் சென்னை கடலூர் மக்களுக்கு களப்பணி செய்து பம்பரமாக சுழன்று சேவை செய்து வருகிறார்கள் என்பதை நீங்கள் ஊடகங்கள் மூலமாகவும் நேரிலும் கண்கூடாக கண்டு வருகிறீர்கள்..
அவர்களுடன் உட்கார்ந்து கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். மஷூராவில் வஹி யுடைய பரகத் இருப்பதாக உலமாக்கள் சொல்கிறார்கள்.
இதை நீங்கள் செய்ய உங்கள் மனசாட்சி இடம் தராவிட்டால், , உங்கள் தலைவி - புரட்சி தலைவி அம்மா அவர்கள் செய்வதுபோல் waatsup மூலம் மக்களுடன் பேசுங்கள் பிரதமர் மோடி செய்வதுபோல் mann ki baath என்று மக்களுடன் வானொலியில் உரையாடுங்கள். ..பிரச்சினைகள் தீர்ந்து விடும்
IF YOU CANNOT SOLVE A PROBLEM ,THEN YOU ARE PART OF THAT PROBLEM .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross