கண்ணியம் காக்கப்பட வேண்டும் posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[07 May 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4252
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
நமது ஊரின் நன்மைக்காக புதியதோர் அமைப்பை "காயல்பட்டினம் நல அறக்கட்டளை" என்ற பெயரில் துவங்கியிருப்பதை அறிகிறோம். இந்த அமைப்பு முழு மனதுடன், எந்த ஒரு பாகுபாடுமில்லாமல் ஊரின் ஒட்டுமொத்த நன்மைக்காக மட்டுமே தொடங்கி அதன்படி செயல்பட்டால் அது வரவேற்கத்தக்கதும், பயன் தரக்கூடியதுமாகும்.
இந்த அமைப்பு பற்றி வலைதளங்களிலும், பிரசுரத்திலும் வெளியான செய்திகளை பார்வையிட்டேன். அதில் கூறப்பட்டிருக்கும் செய்திகள் யாவும் ஊரின் நன்மையை பிரதிபலிப்பதாக இருந்தாலும் சில ஐயப்பாடுகள் தோன்றுகின்றன, அவைகளை பகிர்ந்துகொள்ள ஆசைபடுகிறேன்.
---------------------------------------
முதலாவதாக: மார்க்கம், கல்வி, சுகாதாரம் , நோய், பொருளாதாரம், அரசியல், விளையாட்டு, பாதுகாப்பு, தொழில், விலைவாசி மற்றும் நமது ஊரின் கலாச்சாரம் என்பது போன்ற ஒவ்வொன்றையும் தனித்தனியாக பார்க்காமல் ஒட்டுமொத்தமாக நமது மக்கள் அனுபவித்து வரும் இன்னல்களை அகற்றவே இந்த அமைப்பு அமைக்கபட்டிருக்கிறது என்றால், அவசியம் ஊரின் அனைத்து ஜமாஅத்தார்களையும் இந்த அமைப்பிலே இணைக்க வேண்டும்.
அப்படி ஊரின் ஒட்டுமொத்த ஜமாஅத்தும் இணையாதிருக்கும் பட்சத்தில் இந்த நல்ல நோக்கங்கள் எல்லாம் ஏட்டளவிலே இருக்குமே தவிர - செயலிலே நடைபெறாது என்பதை கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்.
--------------------------------------
இரண்டாவதாக: நமது ஊரிலே பல சங்கங்கள், அமைப்புகள், பேரவைகள் என்று பல பொதுத்தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. அவைகளில் சில நல்ல தொண்டுகளை முறையாக செய்து வருகின்றன. சில அரைகுறையுடனும், வேறு சில செயல்படாமலும் இருக்கின்றன.
ஆகையால் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற கல்வி உதவி, மருத்துவம், கேன்சர் ......... இது போன்ற சில தொண்டுகளை நீங்களும் சிரமம் எடுத்து செய்வதைவிட அது அல்லாத அரைகுறையுள்ள, செயல்பாடில்லாமல் இருக்கின்ற மற்றும் புதிய தொண்டுகளை செய்வது பயன்தரும்.
அப்பொழுதுதான் ஒரு செயலை முழுவதுமாக செய்து பயன்பெற முடியும்.
-----------------------------------------
மூன்றாவதாக: சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை, கலப்படம், போலி விலைவாசியை கட்டுபடுத்துதல் இது போன்ற உங்கள் செயல்திட்டங்களில் நீங்கள் கவனம் செலுத்தினால் மிகவும் பலன் கிடைக்கும். மேலும் இதுவே இன்றைய மக்களின் எதிபார்ப்பாக உள்ளது.
-------------------------------------------------
நான்காவதாக: அரசியல் மற்றும் ஆன்மிகம் இந்த இரண்டிலும் நேரிடையாக ஈடுபடாது இருப்பதே உங்களுடைய மற்ற செயல்பாடுகளுக்கு நல்ல பலனை அளிக்கும்.
ஆனால் அரசியல் கட்சிகள் கலக்காத நல்லதொரு நகராட்சி மன்றம் அமைய வழிகளை உருவாக்கினால் அது நமது ஊருக்கு மிகப்பெரிய பயனை தரும்.
------------------------------------
ஐந்தாவதாக: நமது ஊரின் கலாச்சாரம், தனித்துவம் மற்றும் ஒற்றுமைப் பேணல் இவைகளை கட்டிக்காக்க விரும்பும் நாம் முதலில் நமக்குள்ளே ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
வல்லினம்-மெல்லினம் பார்த்து, எதை மறைமுகமாக சொல்லணும், எதை வெளிப்படியாக சொல்லணும் என்பதை அறிந்து செயல்பட்டாலொழிய எவரும், எந்த அமைப்பும் ஒருபோதும் முன்னேற்றம் காண முடியாது.
சில அமைப்புக்கள் ஊரின் சில விசயங்களை செயலிலே காட்டாவிட்டாலும் கண்ணியம் காக்கிறார்கள். கலாச்சாரமும் கண்ணியமும் காக்கப்பட வேண்டும் என்றால் வெளிப்படுத்தக் கூடியவைகளை வெளிப்படுத்த வேண்டும், மறைக்கக் கூடியவைகளை மறைக்க வேண்டும்.
---------------------------------------
KWT அமைப்பாளர்களே!
நல்ல பல திட்டங்களை செய்ய துடிக்கும் நீங்கள் மிகவும் சிரமம் எடுத்து செயல்பட்டு, வரும் நகராட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகள் இல்லாத பொதுநலனையே விரும்பக்கூடிய ஒழுக்கமுள்ள, இறைவனுக்கு பயந்த, சுறுசுறுப்பான வார்டு மெம்பர்களை தேர்ந்தெடுக்கச் செய்து அனுப்பினால் நமது நகராட்சி மலர்ச்சியடையும். அதன் மூலம் உங்கள் திட்டங்களில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
மக்களுக்காக பாடுபட இருக்கிற இந்த புதிய அமைப்பிலே நல்நோக்கு திட்டத்திற்கு எதிராக செயல்படக்கூடிய எவர் இருந்தாலும், பாரபட்சமின்றி வெளியேற்றி உங்கள் அமைப்பை தூய அமைப்பாக வைத்து செயல்படுங்கள் அல்லாஹ்! வெற்றியைத் தருவான்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! உங்களது இந்த புதிய முயற்சிக்கு ஊர் மக்கள் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்க செய்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross