Re:...பாலாறு ஓர் கோளாறு. posted bymackie noohuthambi (kayalpatnam )[22 December 2015] IP: 116.*.*.* India | Comment Reference Number: 42525
நல்லதொரு விழிப்புணர்வு நிகழ்ச்சி. அரங்கத்தில் ஒலி ஒளி அமைப்பு சற்று விரிவாக்கம் செய்ய வேண்டும். audiance கேட்பதற்கு வசதியாக அங்காங்கே சில ''பாக்ஸ்'' ஒலி பரப்பிகள் வைக்க வேண்டும்.
பொது மக்களுக்கு என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. இணையத்தளம் தவிர்த்து வேறு என்ன வசதிகள் செய்யலாம் என்று இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் கொஞ்சம் மக்களுடன் கலந்து பேசுங்கள். உங்கள் முயற்சிகள் நிச்சயம் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்.
இது திருமண காலம். இந்த காலத்தில் நாம் செய்ய வேண்டிய செய்ய தவறிய அதிகமாக செய்கின்ற செய்யக் கூடாத விஷயங்கள் பற்றியும் ஒரு கலந்துரையாடல் நடத்துங்கள். அது பட்டி மன்றம் வடிவில் இருக்கலாம் காய்தல் உவத்தல் இன்றி இந்த நிகழ்ச்சி நடந்தால் மக்கள் பயன்பெறுவார்கள். ஒரு விஷயத்தை சொல்ல சொல்லத்தான் மக்கள் மனங்களில் அது ஊடுருவி செல்லும். ஆனால் மாற்றங்கள் ஒரே நாளில் நடந்து விடாது.பல பக்கங்கள் நிறைந்த இதிகாசங்கள் ஒவ்வொரு வரியாகத்தான் எழுதப்பட்டது. வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross