செய்தி: தொடர்மழையால் பாதிக்கப்பட்டோருக்கு SDPI சார்பில் உணவுப் பொதி வினியோகம்! குடியிருப்புகளுக்குள் புகுந்த மழை நீரை அகற்றிட ஆணையருக்குக் கோரிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
முறைகேடுகள் சீர் செய்யப்பட வேணும்... posted byதமிழன் முத்து இஸ்மாயில். (INDIA)[25 December 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42568
பாப்புலர் பிரெண்ட் ஆப் இந்தியா S D P I அமைப்பின் கிளை பணிகள் பாராட்டுக்குரியது - மேலும் உங்களின் நகர் நல பணிகள் தொய்வின்றி தொடர வாழ்த்துக்கள்.
கடந்த சில மாதம் முன்பு நகர்மன்ற தலைவர் மூலம் கூட்டப்பட்ட கூட்டதில் நகர்மன்ற தலைவர் கொண்டு வந்த மேஜை பொருளில் ஸீ-கஸ்டம்ஸ் சாலை (தார் மற்றும் ஜல்லி கொண்டு) அமைக்க கோரி கொண்டு வந்து அது உறுப்பினர்களால் நகர் மன்றத்தில் (தனி தனி கற்கள் கொண்டு அமைக்க) தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டு அதை தொடர்ந்து ஆணையாளர் காந்திராஜன் சமீபத்தில் டெண்டர் வெளியிட்ட செய்திகளை பாப்புலர் பிரெண்ட் ஆப் இந்தியா S D P I அமைப்பின் கிளை தலைவர் மற்றும் நிர்வாகிகள் அறிந்திருக்காலம் அதில் சொல்லப்பட்ட மிக பெரிய முறைகேடு என்ன என்பதையும் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்..!
ஆகவே நகர்மன்ற தீர்மானத்திற்கு எதிராக (ஆணையர் காந்திராஜன் வெளியிட்டு இருக்கும்) அந்த டெண்டரில் குறிப்பிட்டு இருக்கும் ஸீ-கஸ்டம்ஸ் சாலையின் தரம் 1 ஆண்டு போதுமானது என்பது கண்டிப்பாக நம்மில் எவராலும் ஏற்றுகொள்ள முடியாதது..! இவர் (ஆணையர்) ஏன் இப்படி செய்கிறார்..? 1 ஆண்டு போதுமானது என்று இவர் டெண்டரில் குறிப்பிடுவதால் இவருக்கு என்ன லாபம்..? அல்லது என்ன நட்டம்..? S D P I யில் விபரம் தெரிந்தோர் விளக்கவும்..!
சுயநலன் தவிர்த்து பொது நலன் கருதி பணியாற்றும் பாப்புலர் பிரெண்ட் ஆப் இந்தியா S D P I அமைப்பின் நிர்வாகிகளே...! உங்கள் அனைவருக்கும் எனது தாழ்மையான வேண்டுகோள் இதோ :- நகர்மன்ற தீர்மானத்திற்கு எதிராக டெண்டர் வெளியிட்டு இருக்கும் இந்த ஆணையரின் கவனத்திற்கு அவரின் தவறுகளை எடுத்து சென்று நல்ல தரமான ஸீ-கஸ்டம்ஸ் சாலை அமைய பெற இந்த டெண்டர் மேட்டரை ஆணையரிடம் சுட்டி காட்டி நல்ல தீர்வு ஏற்பட வேண்டிகொள்கிறேன்.
உங்களின் (S D P I ன்) சுட்டி காட்டுதலுக்கு பிறகும் ஆணையாளர் அந்த தவறை திருத்திகொள்ள இயலவில்லையெனில் நகரின் பொது விசியங்களில் - நகர் நலனில் அக்கறையுள்ள நகராட்சிக்கு வரி செலுத்தும் பொது மக்களில் எவரேனும் ஆணையர் வெளியிட்ட சாலைக்கான டெண்டர் குறித்து வழக்காடு மன்றதில் வழக்கு பதிவு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன.
அதுமாதிரி வழக்குகள் தவிர்க்க பட வேண்டும் என்பது பலரின் விருப்பாக உள்ளது..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross