Re:... posted byAbdul Cader S.H. (Jeddah)[28 December 2015] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42616
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
என் அன்பிற்கும், பாசத்திற்கும், மதிப்பிற்க்கும் உரிய என் அருமை தோழி உம்மா அவர்கள் வபாத் என்னை நிலை குலைய செய்தது. இறைவன் கட்டளைப்படி நடந்த அவனது செயலுக்கு நான் சபூர் எனும் பொறுமையை கடை பிடித்து மர்ஹூமா அவர்களின் மறுமைக்காக துஆ செய்தேன்.
என் மீதும் என் மனைவி மக்கள் மீதும் அளவு கடந்த பாசத்தை வைத்திருப்பவர்கள், அவர்களின் அன்பான அறிவுரைகள் எங்கள் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்தன.
நான் ஊர் செல்லும் காலம் எல்லாம் அன்னாரை சந்திக்க தவறுவதில்லை கடந்த செப்டம்பர் மாதம் 28 திகதி அவர்களை சந்தித்து நான் பயணம் போவதை சொல்லி பிரிந்த போது என்னை மோந்து துஆ செய்து வழி அனுப்பினார்கள். அது தான் எனக்கு அவர்கள் தந்த கடைசி பிரிவு என்பது எனக்கு அறியாமல் போய்விட்டது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து அழகிய பூங்கா வனமான ஜன்னத்துல் பிர்தவுஸில் நுழைய செய்வானாக ஆமீன் !
அன்னாரின் பிரிவால் வாடும் என் அன்பு நண்பர்கள் ராபிக், அஷ்ரப், மெய்தீன் மற்றும் தம்பி ஹமீது சுலைமான், மற்றும் குடும்பத்தார்களுக்கும் சபூர் எனும் பொறுமையை தந்தருள்வானாக, நாம் அனைவரும் பொறுமையுடன் இருந்து மர்ஹூமா அவர்களுக்காக துஆ செய்வோமாக.
குடும்பத்தார் அனைவர்களுக்கும் என் சலாம், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross