Re:. posted byMoinudeen (Kayalpatnam)[29 December 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 42652
அஸ்ஸலாமு அழைக்கும்...
இந்தியாவில் மட்டும் அல்ல, இந்தியாவை போல் வளர்ச்சியை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் நாடுகளில் உள்ள ஆறுகளிலும் இதே பிரச்னை உள்ளது. அல்லாஹ தனது வேதத்தில் அவன் படைப்புக்களை பற்றி சிந்தனை செய்யும் படி மனித சமூகத்தையும் குறிப்பாக முஸ்லிம்களையும் ஏவி உள்ளான். ஏன் என்றால் இவைகளுக்கும் நம் வால்முரைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை நாம் விளங்குவதற்காக. "நாம் வாங்களையும் பூமியையும் ஒரு உண்மையை கொண்டே படைத்துள்ளோம் என்பதை இவர்கள் சிந்திக்க மாட்டார்களா???" மற்றும் "நாம் வானங்களையும் பூமியில் உள்ளவைகளையும் ஒரு உண்மையை வெளிபடுத்தவே படைத்துள்ளோம் என்பதை இவர்கள் சிந்திக்க மாட்டார்களா ??? " என்பது போன்ற வசனங்கள் ஏராளம்.
அரபியில் "பில் ஹக் " மற்றும் "லில் ஹக்" என்று இரண்டு விதமான வார்த்தைகளில் வரும். இரண்டும் ஒரே அர்த்தத்தை கொண்டது என்றாலும் இவ்விரண்டில் ஒன்று மேலதிக விளக்கம் கொண்டது . ஒன்று "உண்மையை கொண்டு" மற்றொன்று "ஒரு உண்மையை வெளிபடுத்த " என்ற பதத்தில் வருவதாக சில தப்சீர் விரியுரையாளர்கள் கூறுவதாக நான் ஒரு ஆங்கில புத்தகத்தில் படித்துள்ளேன். அல்லாஹ வானங்களில் உள்ளவைகளையும் பூமியில் உள்ளவைகளையும் நமக்கு அவன் உதவியால் வாச படுத்தி தந்துள்ளதாக நமக்கு நியாபக படுத்தி உள்ளான். ரசூல் [ஸல்] நமக்கு எல்லா நிலைகளிலும் நம் இயற்கை மார்க்கத்தை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதை விளக்கி விட்டு சென்றுள்ளார்கள். அந்த முறையின் படி நாம் வாழும் போது நாம் நம் வாழ்க்கையையும் இயற்கையையும் சீர் கொலைக்காமல் வாழ முடியும்.
இந்த பௌதீக உலகத்தில் மனிதர்களை தங்கள் தேவைக்கு மிஞ்சிய consumption தான் இவ்வாறான ஆறுகள் மாசு பட காரணம் என்று நான் நினைகிறேன். தண்ணீரை கூட நாம் தேவைக்கு மிஞ்சியே consume செய்கிறோம் .இஸ்லாம் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த சொல்லியுள்ளது நமக்கு. ஏன் என்றால் சிக்கனம் தண்ணீரில் இருந்து தொடங்க வேண்டும் என்பதற்காக தான். தண்ணீரின் முக்கியத்துவம் தெரியாமல் நாம் வீண் விரயம் செய்யும் போது, மற்றதை என்ன என்று சொல்ல...மற்ற தேவை இல்லாத செலவுகளும் அதிகரிக்கவே செய்யும்... சிந்திக்க வேண்டிய விடயம்...
நாம் இவ்வாறாக தேவைக்கு மிஞ்சிய சந்தை பொருள்களை வாங்குவதால் அதனை தயார் செய்யும் தொழிற்சாலைகள் அதற்கான செலவுகள் அதனால் ஏற்படும் wastages எல்லாவற்றையும் நாம் சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ள படுவது இயல்பு. ஏன் என்றால் நாம் இயற்கை வாழ்க்கை முறையை மறந்து வாழ்ந்ததன் விளைவு. இந்த உண்மையை தான் அல்லாஹ் நமக்கு அவ்வப்போது வெளிபடுத்துகிறான். வாழ்கையில் எல்லா நிலைகளிலும் ஒரு உண்மை இருக்கும் எல்லா நிலைகளிலும் ஒரு உண்மை வெளிபடுத்த படும். இவ்வாறுதான் அல்லாஹ் படைத்துள்ளான்.
நான் சில மாதங்களுக்கு முன் ஒரு தமிழ் செய்திதாளில் படித்த செய்தி நினைவுக்கு வருகிறது. சென்னையில் மட்டும் 40000 apartments கெட்ட பட்டு vacant நிலையில் உள்ளது கடந்த 2 அல்லது 3 வருடமாக ... இப்படிப்பட்ட நிலைமை.
நம் ஊரை எடுத்து கொள்வோம். நம் ஊர்களில் வீடு கட்டுவது மிக பிரதான முக்கியமாக உள்ளது . வீட்டை மிக விசாலமாக பல வசதிகளோடும் கட்டும் சகோதரர்களும் உண்டு. ஒன்றுக்கு மேல் 2, 3 , 4 என்று கட்டி விட்டு வீடுகளை காலியாக வைத்துகொள்ளும் சகோதரர்களும் நம்மில் உண்டு. குறுகிய வாழ்கையில் வாழ்வதற்குத்தான் வீடு என்பது போய் நாம் நிரந்தரமாக வாழ போகும் வீடு என்ற பிரம்மையான நம்பிக்கைதான் இதற்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்.
எதற்கு இவைகளை சொல்ல வருகிறேன் என்றால் தேவைக்கு மிஞ்சிய வீடுகள் கட்டபடுவதால் அவைகளுக்கு தேவையான மணல்களின் தேவை அதிகமாகும்... தேவைக்கு ஏற்றாற்போல் தான் மணல் அல்ல வேண்டும் என்பதற்காக அரசு ஒரு அளவை நிர்ணயித்துள்ளது. அரசாங்கத்தில் உள்ள அரசியல் வாதிகள் மற்றும் அரசு சார்ந்த அதிகரிகலானாலும் சரி இந்த too much consumption கு விதி விலக்கல்ல.
நிலைமை இப்படி இருக்க மணல் கொள்ளைகள் ஏற்படுவது இயல்புதான் . இவைகளை சொல்லி நமக்கு எந்த மாற்றமும் வர போவது இல்லை. அல்லாஹ் எல்லாவற்றையும் ஒரு கணக்கில் தான் படைத்துள்ளான் என்பது குரான் நமக்கு சொல்லும் போதனை.அந்த கணக்கு மீறப்படும் போது எதிர் வினைகள் ஏற்படும் என்பது அல்லாஹ் வெளிபடுதிகிற உண்மை. அதனை நாம் இப்போது சந்தித்து கொண்டு இருக்கிறோம்.
நாம் வாழும் வாழ்க்கை முறை மாறாத வரை இதற்கு தீர்வு எதுவும் கிடையாது. குறித்து வைத்துக்கொள்ளுங்கள் ! நாம் செய்யும் சிறு நன்மையானாலும் சரி சிறு அமலானாலும் சரி
, நிச்சயமாக உலகில் எங்கோ ஒரு மூலையில் ஒரு மாற்றம் நிச்சயம் நிகழும். அந்த மாற்றம் நம் புலன்களுக்கு எட்ட வேண்டும் என்ற நிலை இல்லை. சில மாற்றங்கள் நாம் நம் கண்களால் பார்க்கலாம் . பல மாற்றங்கள் நம் புலன்களுக்கு எட்டாது. ஆதலால் மாற்றம் இல்லை என்ற நிலை இல்லை.
ஒரு நன்மை நாம் செய்தால் அல்லாஹ் 10 மடங்கு நன்மை தருவதாக வாக்களித்து உள்ளான். அந்த 10 நன்மைகள் பயனால் நிச்சயம் உலகில் மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும். இது மறைவான விஷயம் . இதனை நம்பித்தான் நம் ஈமான் உள்ளது என்பதை நான் நினைவு படுத்த விரும்புகிறேன்.
இஸ்லாமிய வாழ்க்கை முறையை நாம் நம் குடும்பத்தில் இருந்து தொடங்குவோம்.. உலகம் தானாக மாறும்... அதை பற்றி நாம் கவலை கொள்ள வேண்டியது இல்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross