மாமனிதரின் மரண சேதிகேட்டு நொடிந்து போனேன்... posted byM.N.L.முஹம்மது ரபீக் (சிங்கப்பூர்)[02 January 2016] IP: 14.*.*.* Singapore | Comment Reference Number: 42697
மகத்தான அழைப்புப் பணியாளரின் மரண சேதி கேட்டு நொடிந்து போனேன். 01/01/2016 இந்த புது வருடப் பிறப்போடு தன் இறப்பும் உண்டு எனஅவர் அறிந்திருக்க மாட்டார். இருப்பினும் முகநூலில் அவர் பதித்த வார்த்தைகள் எவ்வளவு கருத்தாழம் கொண்டவை இதோ செங்கிஸகான் எனும் மாமனிதனின் ஆதங்கம் அல்லது அறிவுரை...
விடிய விடிய பீப் பாடலோடு குத்தாட்டம் !
விடியும் வரை பீர் பாட்டிலோடு கொண்டாட்டம்!
கடந்த வாரம் பீப் பாடலுக்கு கொதித்த சென்னையா இது ?
கடந்த வாரம் வெள்ளத்தில் தத்தளித்த சென்னையா இது?
மனசாட்சி கொண்ட மனிதர்களை கண்டோம் வெள்ளத்தில் மனசாட்சியற்ற மனிதர்களை கண்டோம் புத்தாண்டில் !
சகலத்தையும் இழந்து நிற்கும் சக மனிதன் குறித்த
கவலையின்றி எப்படி கும்மாளம் போட முடிகிறது ?
அறிவுக்கு பொருத்தமில்லாத,
பொருளாதார விரயம் செய்கின்ற
இந்திய கலாசாரத்திற்கு சம்மந்தமில்லாத
ஆண்டுக் கொண்டாட்டம் கும்மாளங்களில் இருந்து
எங்களைக் காத்த இறைவனுக்கே புகழனைத்தும்!
முஸ்லிமல்லாத சகோதார்களே சிந்தியுங்கள் !
உங்களை வெள்ளத்தில் இருந்து காத்த
உங்களின் பசிக்கு உணவளித்த
உங்களுக்கு நிவாரப் பொருட்களை வழங்கிய
உங்களின் வீதிகளில் தூய்மைப்பணி செய்த
எந்த முஸ்லிமையும் இந்தப் புத்தாண்டு
கொண்டாட்டங்களில் பார்க்க முடியாது !
ஏன் எனில்
பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதையே
படைத்தவன் எங்களுக்கு கொண்டாட்டமாக
ஆக்கியுள்ளதை எங்களின் இரு பெருநாளிலும்
நீங்கள் கண்கூடாகக் காணலாம் !
குடிப்பதும் வெடிப்பதும் குத்தாட்டம் போடுவதும்
பண்டிகைகள் இல்லை!அதனால் எந்தப் பயனுமில்லை !
இல்லாதவர்க்கு வழங்குதலும்
இறைவனை வணங்குதலுமே
இஸ்லாம் கூறும் பண்டிகைகள் !
-செங்கிஸ்கான்.
அல்லாஹ் இந்த மாமனிதரைப் பொருந்திக் கெள்வானாக! மேலான சுவனத்தில் இவரை பிரவேசிக்கச் செய்தருள்வானாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross