தமிழகத்தின் புகழ்பெற்ற இஸ்லாமிய அழைப்பாளரும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ) நிர்வாகிகளுள் ஒருவருமான - இராமநாதபுரம் மாவட்டம் இளையாங்குடியிலுள்ள புதூரைச் சேர்ந்த செங்கிஸ்கான் (வயது 45), இன்று 21.00 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு மனைவியும், இரண்டு ஆண் மக்களும் உள்ளனர்.
சிறந்த பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் மிக்க இவர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் மூலமும், சுற்றுப் பயணங்கள் மூலமும் இஸ்லாமிய அழைப்புப் பணி தொடர்பாகவும், முஸ்லிம் சமூகம் குறித்த முஸ்லிமல்லாத மக்களின் புரிந்துணர்வுகளை வலுப்படுத்தும் வகையிலும் பல மேடைகளில் பேசியும், எழுதியும் வந்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பிரதிகளை - முஸ்லிமல்லாத மக்களுக்கு வழங்கியுள்ள அவர், ஹிஜ்ரீ நாட்காட்டி தொடர்பான சிந்தனைகளை சமூக ஊடகங்களில் பதிவு செய்தவர்.
அன்னாரின் ஜனாஸா, 02.01.2016. சனிக்கிழமையன்று (நாளை) அஸ்ர் தொழுகைக்குப் பின், சென்னை ராயப்பேட்டை பள்ளிவாயில் கப்ருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. |