காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள் கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
ஐனவரி 1, 2007 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 695]
திங்கள், ஐனவரி 1, 2007
ரயிலுக்கு பிரியாவிடை
செய்தி: மாஸ்டர் கம்ப்யூட்டர்
மீட்டர் கேஜ் ரயிலுக்கு பிரியாவிடை!
அகல ரயில் பாதை பணிகள் இன்று முதல் துவங்குவதால் நெல்லை-திருச்செந்தூர் மீட்டர் கேஜ் ரயிலுக்கு நெல்லை ரயில் நிலையத்தில் நேற்று மாலை 6:30 மணிக்கு பயணிகள் பிரியாவிடை கொடுத்தனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் திருச்செந்தூருக்கு மீட்டர் கேஜ் பாதை அமைக்கப்பட்டு நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு முதல் ரயில் பயணம் கடந்த 24-02-1923ம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் எஸ்.டி., ஒய்.எல்., ஒய்.ஜி., ஒய்.பி. ஆகிய ரக நீராவி இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன.
பின்னர் 1995ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி முதல் டீசல் இன்ஜின் ரயில்கள் இயக்கப்பட்டது. இதனால் ஆரம்பத்தில் மூன்று மணி நேரமாக இருந்த பயணம் இரண்டு மணி நேரமாக குறைந்தது. இந்நிலையில் ரூபாய் 93 கோடி செலவில் திருச்செந்தூர்-நெல்லைக்கு அகல ரயில் பாதை அமைக்க திட்டம் தீட்டப்பட்டது. இன்று 1ம் தேதி முதல் அகல ரயில் பாதை பணிகள் துவங்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்தது. இதற்காக டிசம்பர் 31ம் தேதியுடன் திருச்செந்தூர்-நெல்லை மீட்டர் கேஜ் ரயில் நிறுத்தப்படும் என்றும் தென்னக ரயில்வே அறிவித்தது. தினமும் ஐந்து முறை திருச்செந்தூர்- நெல்லை வழித்தடத்தில் பயணிகளை சுமந்து வந்த இந்த ரயில் சேவை நேற்றுடன் நிறைவடைந்தது. இதை முன்னிட்டு நேற்று மாலை 6:30 மணிக்கு திருச்செந்தூருக்கு புறப்பட்ட ரயிலுக்கு வழியனுப்பு விழா நடந்தது.
|