காயல்பட்டினத்தில் நேற்றும், இன்றும் (29, 30/12/2015) இரவில் துவங்கி, நள்ளிரவு முழுக்க சாரலும், இதமழையும் பெய்துள்ளது. பகல் பொழுதுகளிலும் சிற்சிறு இடைவெளிகளுக்கிடையே சாரல் பெய்தவண்ணம் இருந்தது. பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று (29.12.2015.) வெளியிடப்பட்ட மழை பொழிவுப் பட்டியலின் படி, காயல்பட்டினத்தில் 25.00 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
இன்று (30.12.2015.) வெளியிடப்பட்ட மழை பொழிவுப் பட்டியலின் படி, 6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|