காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர் - சதுக்கைத் தெருவைச் சேர்ந்த ஆர்.எஸ்.அப்துல் கய்யூம், இன்று (30.12.2015. புதன்கிழமை) நள்ளிரவு 01.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 65. அன்னார்,
மர்ஹூம் எஸ்.ஏ.ருக்னுத்தீன் ஸாஹிப் அவர்களின் மகனும்,
மர்ஹூம் வாவு ஸுலைமான் அவர்களின் மருமகனாரும்,
பெரிய - சிறிய குத்பா பள்ளிகளின் தலைவர் ஆர்.எஸ்.அப்துல் காதிர், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர் முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், அதன் ஆட்சிக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.அப்துல் வஹ்ஹாப் ஆகியோரின் சகோதரரும்,
மர்ஹூம் எம்.எல்.மூஸா நெய்னா அவர்களின் மைத்துனரும்,
ஏ.சி.அப்துர்ரஹ்மான் என்பவரின் தந்தையும்,
எம்.என்.அப்துல் மாலிக், வாவு சி.எஸ்.ஷாஹுல் ஹமீத் ஆகியோரின் மாமனாரும்,
ஏ.எம்.தவ்ஃபீக் மூஸா, ஏ.எம்.அப்துல் கய்யூம், வாவு சி.எஸ்.அப்துல் காதிர், வாவு சி.எஸ்.அப்துல் கய்யூம் ஆகியோரின் பாட்டனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று 13.00 மணியளவில் குத்பா பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
M.M.முஜாஹித் அலீ
படம்:
ஹாங்காங்கிலிருந்து...
ஹாஃபிழ் A.L.இர்ஷாத் அலீ |