11 ஆயிரம் பேர் பங்கேற்ற Abacus and Arithmatic Competition 2015 போட்டியில், 2 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரிவில் - ஐக்கிய அரபு அமீரகம் வாழ் காயல்பட்டினம் மாணவர் அனஸ் பதாத் முதலிடம் பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
காயல்பட்டினம் தீவுத் தெருவைச் சேர்ந்த முஹம்மத் ரயீஸ் - தமீமா ஃபர்வீன் தம்பதியின் மகனும், அஹ்மத் பஷீர் - ஏ.எஸ்.எம்.மரைக்கார் ஆகியோரின் பேரனுமான இவர், ஐக்கிய அரபு அமீரகம் - அல்அய்ன் ஜுனியர் பள்ளியில் 05ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
Universal Concept Mental Arithmatic System (UCMAS) எனும் அமைப்பு, சர்வதேச அளவில் 20ஆவதும், இந்திய அளவில் 14ஆவதுமான UCMAS Abacus & Arithmatic Competition 2015 போட்டியை, நடப்பு டிசம்பர் மாத் 05, 06 நாட்களில் டில்லி பல்கலைக் கழகத்தின் Delhi North Campus வளாகத்தில் நடத்தியது.
மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியில் - மலேசியா, இந்தியா, பஹ்ரைன், சீனா, கம்போடியா, இரான், இந்தோனேஷியா, கஜகிஸ்தான், ஜோர்தான், ஓமன், கனடா, ட்ரினிடாட், மெக்ஸிகோ, அமெரிக்கா, ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்பெய்ன், ரஷ்யா, துருக்கி, ஐக்கிய ராஜ்யம் (UK), ஃபிஜி, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, எகிப்து, ஐவரி கோஸ்ட், மொரோக்கோ, நைஜீரியா, சூடான், தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே உள்ளிட்ட 34 நாடுகளிலிருந்து, 2 ஆயிரம் மழலையர் உட்பட 11 ஆயிரம் மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.
இந்தியாவிலிருந்து - குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், டில்லி, கர்நாடகம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, ஜம்மு & கஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.
இதில், 2 ஆயிரம் சிறு மாணவ-மாணவியர் பங்கேற்ற துவக்க நிலைப் போட்டியில் (Basic Level), மாணவர் அனஸ் பதாத் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இத்தகவல், ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளியாகும் நாளிதழிலும் வெளியாகியுள்ளது.
மாணவர் அனஸ் பதாத், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற UCMAS இறுதிப்போட்டியில் இரண்டாமிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்:
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து...
சாளை ஸலீம் & ‘துணி’ அன்ஸாரீ
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 21:27 / 31.12.2015]
|