காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
டிசம்பர் 29, 2007 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 1477]
சனி, டிசம்பர் 29, 2007
ஹாங்காங்கில் காயல் நலமன்றம் துவக்க ஆலோசனை!
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
காயலர்கள் பல்கிப் பெருகி வாழும் உலகின் பெரும்பாலான பகுதிகளில் நகர்நலப் பணிகள் செய்திடுவதற்காக காயல் நல மன்றங்கள் துவக்கப்பட்டு அரிய பல சேவைகள் ஆற்றப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக ஹாங்காங்கில் காயல் நல மன்றம் இது வரை இல்லாதிருப்பதையுணர்ந்து, அங்குள்ள காயலர்கள் ஒருங்கிணைந்து காயல் நல மன்றம் அமைப்பது பற்றி ஆலோசனை மேற்கொண்டனர்.
இவ்வாலோசனைக் கூட்டம் ஹாங்காக் கோல்ட் கோஸ்ட் கடற்கரையில் நடத்தப்பட்டது. ஹாங்காங்கில் சொந்தத் தொழில் செய்வோர் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிவோர் பலர் இக்கூட்டத்தில் திரளாகப் பங்கெடுத்துக் கொண்டனர்.
இக்கூட்டத்தை இந்நோக்கத்திற்கான முதல் கூட்டமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், விரைவில் இன்னுமோர் ஆலோசனைக் கூட்டம் நடத்தி ஹாங்காங் காயல் நல மன்றம் துவக்குவது குறித்து முடிவெடுப்பதெனவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஹாங்காங் காயல் நலமன்றம் அமைப்பது பற்றிய ஆலோசனைக் கூட்டத்தின் புகைப்படத் தொகுப்பு இதோ:-
காயல்பட்டணம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக உதவும் நோக்கில் இளைஞர்களை மட்டும் உள்ளடக்கி Kayal Students Welfare Association - KASWA என்ற பெயரில் அமைப்பொன்று செயல்பட்டு வருவதும், ஆண்டுதோறும் நல்ல பல சேவைகளாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
|