காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள் கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
ஐனவரி 2, 2005 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 513]
ஞாயிறு, ஐனவரி 2, 2005
ஐக்கிய பேரவையின் வேண்டுகோள்
செய்தி: மாஸ்டர் கம்ப்யூட்டர்
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் வேண்டுகோள்!
இந்தோனேசியக் கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடல் படுகையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து எழுந்த ராட்சத சுனாமி அலைகள் 26-12-2004 அன்று தமிழகத்தின் கடற்கரை பகுதிகளை கடுமையாக தாக்கின. இதனால் தமிழக கடலோரப் பகுதிகள் சொல்லவொன்னா பேரழிவுகளுக்கும், இன்னல்களுக்கும் இலக்காயின. இதற்கு முன் எப்போதும் கண்டிராத அளவுக்கு கடும் சீற்றத்துடன் பேரலைகள் உறுவெடுத்து பேரழிவை ஏற்படுத்தி உள்ளன.
இப்பேரழிவின் காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளான சென்னை, கோவளம், நாகூர், நாகப்பட்டினம், குளச்சல் போன்ற பகுதிகளில் பொருட்சேதமும், உயிர் சேதமும் அதிகமதிகம் ஏற்பட்டு பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளது. காயல்பட்டினத்தில் சுமார் 22 வீடுகள் சேதமாகி அவர்கள் அனைவரும் அரசு முகாம்களில் தங்க வைக்கபட்டுள்ளனர்.
இக்கோர விபத்தில் முஸ்லிம்களும், கிருஸ்தவர்களும், இந்துக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும், பாதுகாப்பு வேலைகளும் முஸ்லிம் அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் செய்து வருகிறது. எடுத்துவரும் இந்த முயற்சிகளுக்கு நெஞ்சை உருக்கும் இந்த சோக சம்பவத்தால் துன்புற்று மனம் இரங்கும் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
இந்நிலையை கருத்தில் கொண்டு நமது காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைத்திட நிதி திரட்டுகிறது. இந்நிதியினை அரசின் மூலம் சமர்பிக்கப்பட்டு மேற்கொண்டு நிவாரண நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறது.
எனவே வெளியூர், வெளிநாடுகளில் வாழும் காயல் நகர கண்மனிகள் உங்கள் உடைய நிதிகளை காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை, கே.டி.எம். தெரு என்ற முகவரிக்கு உடனடியாக அனுப்பித்தர வேண்டுகிறோம். ஒவ்வொரு பகுதியில் இருக்கிற பொதுநல அமைப்புகள், நற்பணி மன்றங்கள் இந்நிதியினை ஒன்று திரட்டி அனுப்பி தர அன்புடன் வேண்டுகிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர்களையும் காப்பாற்றி அருள்புரிவானாக ஆமீன்.
இவண்,
ஹாஜி எம்.எம்.உவைஸ்,
தலைவர், காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை.
|