காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள் கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
ஐனவரி 4, 2000 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 422]
செவ்வாய், ஐனவரி 4, 2000
காயல்பட்டணம் பட்டதாரிகள் சங்கம்!
செய்தி: மாஸ்டர் கம்ப்யூட்டர்
காயல்பட்டணம் பட்டதாரிகள் சங்கம்
காயல்பட்டணம் உயர்கல்வி மேம்பாட்டு மையம்.
பேரன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும்.
வரலாற்று சிறப்புமிகு காயல்பட்டணம் புராதன இஸ்லாமிய நகரங்களில் ஒன்றாகும். வள்ளல் பெருமக்கள், வணிகச்செம்மல்கள், புரவலர்கள், புலவர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், வழக்கறிஞர்கள், அறிவியல் ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேரறிஞர்கள் நிறைந்து வாழும் சிறப்புயர் பொற்பதியாகும்.
இந்நகரில் எண்ணற்ற பட்டதாரிகள் உருவாகியும், உருவாகிக் கொண்டும், இனி உருவாகவும் உள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரியதாகும். நமதூர் பட்டதாரிகளை ஒன்றிணைக்கும் முயற்சி முந்தைய காலங்களில் பயன் தரவில்லை. பிறகு தொழிற்கல்வி படித்த (Professional) பட்டதாரிகள் கூட்டம் 30-12-2000 தேதியில் நடைபெற்றது. பலரும் பயன்பெற்றனர். புதிய தொடர்பையும், வேலை வாய்ப்பு தகவலையும், பரிமாறிக் கொண்டனர். இப்பணி மீண்டும் தொடரவும் நமதூர் அனைத்து பட்டதாரிகளை ஒன்றிணைக்கும் முயற்சி மலரவும் இத்துறையில் ஈடுபட்டுள்ளோம். இச்சீரிய பணிக்கு நமதூர் பெருந்தகை கண்ணியத்திற்குரிய அல்ஹாஜ் ராவன்னா அபுல்ஹசன், ஜெனரல் மானேஜர், அரபியன் கல்ப் சிமெண்ட் கம்பெனி, பஹ்ரைன் அவர்களை தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுத்துள்ளோம்.
எனவே இளங்கலை (U.G.) முதுகலை (P.G.) தொழிற்கல்வி (Professional) ஆராய்ச்சியாளர்கள் (Ph.D.) படித்து முடித்தவர்கள் உங்களின் இருப்பிட முழு முகவரி, தற்பொழுது பணிபுரியும் முகவரி, தொழில்புரியும் முகவரி (Business) பதவிப்பொறுப்பு (Designation) விவரங்களையும், தொலைபேசி எண்ணையும் குறிப்பிடுவதுடன் சான்றிதழ்களின் நகல்களையும் (Xerox Copy) கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ மிக விரைவில் அனுப்பித் தர அன்புடன் வேண்டுகிறோம். படித்து கொண்டு இருக்கும் வருங்கால பட்டதாரிகளும் தங்கள் முழு முகவரியுடன் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
குறிப்பு :
1. முன்பு வெளியிட்ட அறிக்கையின்படி I.A.S. படிக்க ஒரு மாணவனுக்கு அல்ஹாஜ். ராவன்னா அபுல்ஹசன் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறோம்.
2. +2 படித்த, படித்துக் கொண்டு இருக்கும் மாணவ, மாணவியர்கள் அகில இந்திய நுழைவுத் தேர்வு (All India Entrance Examinations) விண்ணப்பம், உயர்கல்வி வழிகாட்டுதல், கல்வி ஊக்கத்தொகை (Scholarship) ஏற்பாடு செய்யப்படும். தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு (Hall Ticket) தேர்வு மையம் (Exam Centre) அருகாமையில் ஏற்பாடு செய்யப்படும்.
3. தொலைதூரக் கல்வி (Directorate of Distance Education) அனைத்து பட்டப்படிப்புக்கும் ஆலோசனையும் வழமை போல் உறுதுணையும் புரியப்படும்.
4. பட்டதாரிகள் கூட்டம் மிக விரைவில் நடைபெறும்.
5. மிக விரைவில் பட்டதாரிகள் பெயர் புத்தக வடிவில் வெளியிடப்படும்.
இவண்,
ஒருங்கிணைப்பாளர்,
காயல் நுழைவுத்தேர்வு பயிற்சி மையம் (K.E.C.C.)
காயல் எஜுகேஷனல் டெவலப்மெண்ட் பாரம் (K.E.D.F.)
இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF)
காயல்பட்டணம் - 628204.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 6:00 pm / 5.1.2016] |