காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள் கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
ஐனவரி 6, 2011 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 5408]
வியாழன், ஐனவரி 6, 2011
நகராட்சி தலைவர் - மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்!
செய்தி: காயல்பட்டணம்.காம்
நகரில் புது சுனாமி குடியிருப்புகள் தேவையில்லை என தீர்மானங்கள் - ஜூன் 11, 2008 அன்றும், பிப்ரவரி 26, 2009 அன்றும் , டிசம்பர் 31, 2010 அன்றும் நகராட்சி நிறைவேற்றி உள்ளது. அவைகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கும் முகமாக காயல்பட்டினம் நகராட்சி தலைவர் வாவு செய்யத் அப்துர் ரஹ்மான் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
அனுப்புநர்
திரு. வாவு. சா. செய்யது அப்துர் ரஹ்மான்,
நகர்மன்றத் தலைவர்,
காயல்பட்டணம் நகராட்சி.
பெறுநர்
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
தூத்துக்குடி.
நாள் 03.01.2011
கடித எண் 001/2010
பொருள் - காயல்பட்டணம் நகராட்சி 7வது வார்டு கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை) 169 சுனாமி குடியிருப்புகள் மத்திய மாநில அரசுகளின் விதிமுறைகளுக்கு மாறாக குடியிருப்புகள் கட்டப்படுவது தடைசெய்யக்கோரி
ஐயா,
காயல்பட்டணம் நகராட்சி 7வது வார்டு கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை) 169 சுனாமி குடியிருப்புகள் மத்திய மாநில அரசுகளின் விதிமுறைகளுக்கு மாறாக சுனாமி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இக்குடியிருப்புகளுக்கு காயல்பட்டணம் நகராட்சியின்
ஒப்புதலோ நகர் ஊரமைப்புத்துறையின் அனுமதியோ சுற்று சூழல்துறையின் அனுமதியோ மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியோ இன்றி கடல் பரப்பிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்கு CRZ(COASTAL REGULATION ZONE) பகுதி 1-ல் குடியுயிருப்பு கட்டிடங்கள் கட்டிட முறையாக அனுமதி
பெறவேண்டும் என்ற மத்திய அரசின் விதிமுறைகளுக்கு மாறாக இச்சுனாமி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றது.
மேலும் மன்றத்தீர்மர்னம் எண் 368 நாள் 16.06.2008, மற்றும் மன்றத்தீர்மானம் எண் 541 நாள் 26.02.2009 ஆகிய இரண்டு நகர்மன்றக்கூட்டத்திலும் சுனாமி மறுவாழ்வு திட்டத்தின்கீழ் காயல்பட்டணம் நகராட்சி எல்கைக்குட்பட்ட இடத்தில் சுனாமி குடியிருப்புகள் கட்ட தேவையில்லை என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. தீர்மானம் எண் 815 நாள் 31.12.2010 நகர்மன்றக்கூட்டத்தில் தற்போது கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை)யில் 169 சுனாமி குடியிருப்புகள் மத்திய , மாநில அரசுகளின் விதிமுறைகளுக்கு மாறாக, காயல்பட்டணம் நகராட்சியின் அனுமதியின்றி கட்டப்படுவதால் அச்சுனாமி குடியிருப்புகளை கட்ட தடை செய்யுமாறு நகராட்சிகளின் அரசு முதன்மைச் செயலர், நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களை கேட்டுக் கொள்ள ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே மேற்படி 169 சுனாமி குடியிருப்புகள் கட்ட தேவையில்லை என கேட்டுக் கொள்கிறோம்.
நகர்மன்றத்தலைவர்,
காயல்பட்டணம் நகராட்சி.
|