பொது வினியோகத் திட்டம் சிறப்பாக நடைபெறுவதற்காக, தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் மனு நீதி நாள் முகாம் நடைபெற்று வருகிறது.
அந்த வரிசையில், காயல்பட்டினம் 10, 11ஆம் வார்டுகளைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு, இன்று (09.01.2016. சனிக்கிழமை) 10.00 மணி முதல் 13.00 மணி வரை மனு நீதி நாள் முகாம் - நெசவுத் தெரு பெண்கள் தைக்கா வளாகத்தில் நடைபெற்றது.
திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கோபாலகிருஷ்ணன் இம்முகாமில் கலந்துகொண்டு, மனுக்களைப் பெற்றுக்கொண்டார். உதவி அலுவலர் தாரிக் உள்ளிட்ட அலுவலர்கள் துணைப்பணியாற்றினர்.
இம்முகாமில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், முகவரி மாற்றம், ஒப்புவிப்பு சான்றுகளை சமர்ப்பித்தல் ஆகிய தேவைகளுக்காக 176 பேர் மனு அளித்து பயன்பெற்றனர்.
காயல்பட்டினம் நகர்மன்ற 11ஆவது வார்டு உறுப்பினரும் - துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன், 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை இணைந்து செய்திருந்தனர். 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன், 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன் ஆகியோரும் இதன்போது உடனிருந்தனர்.
தகவல் & படங்கள்:
A.K.முஹம்மத் முகைதீன் |