காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள் கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
ஐனவரி 10, 2010 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 3835]
ஞாயிறு, ஐனவரி 10, 2010
வேகமாக நீர் தேங்கும் சிமெண்ட் சாலைகள்!
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
காயல்பட்டினம் நகரின் பல தெருக்களில் தார் சாலைகள் அகற்றப்பட்டு, சிமெண்ட் சாலைகள் போடப்பட்டுள்ளன. சிறு மழை பெய்தாலும் கூட, இச்சாலைகளில் தண்ணீர் வேகமாக தேங்கி விடுவதோடு, அவை மண்ணில் உறிஞ்சப்பட வழியில்லாத நிலையில், சாக்கடையாக மாறி, பல்வேறு நோய் தொற்றுக்குக் காரணியாகி விடுகின்றன.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழி காரணமாக இன்று காலை 7.30 மணியிலிருந்து 8.30 மணி வரை காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புறங்களில் மழை பெய்தது. இம்மழை காரணமாக, காயல்பட்டினம் லெப்பப்பா தர்ஹா அமைந்துள்ள நெய்னார் தெரு - சதுக்கைத் தெரு இடைச்சாலையில் வேகமாக நீர் தேங்கியது.
நகரின் இதர பகுதிகளில் தேங்கிய நீர் உடனடியாக வற்றிவிட்ட நிலையில், இச்சாலையில் மட்டும் மழை நீர் குளம் போல காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
|