காயல்பட்டினம் எல்.கே.லெப்பைத்தம்பி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி 07.01.2016. வியாழக்கிழமையன்று காலையில் நடைபெற்றது.
நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் திருவேங்கட ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இப்பணியின்போது, நெடுஞ்சாலைத் துறை இளநிலை பொறியாளர் முத்துராஜ், சாலை ஆய்வாளர் வசந்தி, திருச்செந்தூர் வட்டாட்சியர் வெங்கடாச்சலம், காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், காயல்பட்டினம் தென்பாகம் கிராம நிர்வாக அலுவலர் ஃப்ரான்சிஸ் சேவியர் ஆகியோர் உடனிருந்தனர்.
கூலக்கடை பஜார், எல்.கே.லெப்பைத்தம்பி சாலை ஆகிய இடங்களில் 11.03.2012. அன்று பெரும் பரபரப்பிற்கிடையே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதன் பிறகும் அங்கு அவ்வப்போது தொடர்ச்சியாக வணிக நிறுவன கட்டிடங்கள் சாலையை முன்னோக்கி கட்டப்பட்ட வண்ணம் இருந்தது. ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி முடிந்து 4 ஆண்டுகள் நிறைவடைவதற்குள் மீண்டும் அங்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஆக்கிரமிப்பு அகற்றும் பணியையொட்டி, மின்வாரியத்தினரும், காவல்துறையினரும் முன்னெச்சரிக்கையாக நிகழ்விடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். நகர் முழுக்க மின் வினியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது. காயல்பட்டினம் கூலக்கடை பஜார் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் பிரதான வீதி வழியே மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவின் பேரில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், அந்த வரிசையிலேயே இப்பணியும் நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படங்கள்:
A.K.முஹம்மத் இம்ரான்
காயல்பட்டினத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக! |