கண்ணியமான தேர்தல் பிரசார தொடக்க விழா சென்னையில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் ஜனவரி 8 அன்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சகாயம் IAS பேசியதாவது:
தங்களுடைய தலைவர் ஊழலற்றவராக, நேர்மையானவராக இருக்க வேண்டும் என்று எண்ணுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. நம்
தேசம், சமூகம் முன்னேற வேண்டும். அதற்கு தொடக்கமாக நாம் பொறுப்பாளராக இருக்க வேண்டும். நேர்மையான, பொறுப்பான சமூகமாக இந்த
தமிழ்ச் சமூகம் மாறுவதற்கு கண்ணியமான தேர்தல் நடக்க வேண்டும்.
இந்த தேசத்தை நேசிப்பதன் அடையாளமாக தமிழக மக்கள் இந்த முறை கண்ணியமான தேர்தலை நடத்திக் காட்டுவார்கள். அதற்கு மாணவர்கள்,
இளைஞர்சக்தி நிச்சயமாக உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு சகாயம் பேசினார்.
இவ்விழாவில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பேசும்போது,
“உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று 1950 அல்லது 9444123456 ஆகிய எண்களுக்கு உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை எஸ்எம்எஸ் அனுப்பி, உறுதி செய்துகொள்ளுங்கள். நேர்மையான, நியாயமான தேர்தல் நடக்க ஒத்துழையுங்கள்"
என்றார்.
தகவல்:
தி இந்து |