காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPAவின் பொருளாளர் ஏ.ஆர்.முஹம்மத் இக்பால் உடைய சகோதரியின் கணவர் - மகுதூம் தெருவைச் சேர்ந்த ஏ.ஜெய்னுத்தீன் ஹாஜி, இன்று 18.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 80. அன்னார்,
மர்ஹூம் எம்.எம்.அஹ்மத் ஹாஜி அவர்களின் மூத்த மகனும்,
மர்ஹூம் சாளை எஸ்.டீ.அப்துர்ரஸ்ஸாக் அவர்களின் மூத்த மருமகனாரும்,
மர்ஹூம் ஏ.முஹம்மத் முஹ்யித்தீன் அவர்களின் சகோதரரும்,
கானி மிஸ்கீன் ஸாஹிப், ஏ.எச்.மஹ்மூத் ஹஸன் ஆகியோரின் மாமனாரும்,
ஏ.ஆர்.லுக்மான், KEPA பொருளாளர் ஏ.ஆர்.முஹம்மத் இக்பால் ஆகியோரின் சகோதரியின் கணவரும்,
எம்.என்.முஹம்மத் ஸுலைமான், வி.எம்.ஏ.நூஹ் ஸாஹிப் ஆகியோரின் சகலையும்,
சாளை அப்துர்ரஸ்ஸாக் லுக்மானின் தாய்மாமாவும்,
எம்.எச்.அஹ்மத் ஜெய்னுத்தீன், எம்.எச்.முஹம்மத் அலீ, ஏ.ஜைத் மிஸ்கீன் ஆகியோரின் பாட்டனாரும்,
ஹாஃபிழ் எம்.எம்.அஹ்மத், ஹாஃபிழ் எம்.எம்.அபுல்ஹஸன் மக்கீ, எம்.எம்.ஜெய்னுத்தீன் ஆகியோரின் பெரிய தந்தையுமாவார்.
அன்னாரின் ஜனாஸா, நாளை (12.01.2016. செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணியளவில், மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
சட்னி S.A.K.செய்யித் மீரான்
படம்:
சாளை அப்துர்ரஸ்ஸாக் லுக்மான் |