திருச்செந்தூர் அருகே கடற்கரையோரம் 120 ராட்சத திமிங்கலங்கள் கரை ஒதுங்கின.
பாலூட்டி இனத்தைச் சேர்ந்த திமிங்கலம், மற்ற மீன் இனங்களைப்போல செவுள்களால் சுவாசிக்காமல், மனிதர் களைப் போலவே நுரையீரல் இருப்பதால் சுவாசிப்பதற்கு கடலின் மேற்பரப்புக்கு அடிக்கடி வந்து செல்லும். இவற்றால் அதிகபட்சமாக 2 மணி நேரம் வரைகூட மூச்சுவிடாமல் இருக்க முடியும்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆழந்தலை கடற்கரை பகுதியில் சுமார் 300 கிலோ முதல் ஆயிரம் கிலோ எடை கொண்ட 120 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.
ராட்சத திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது குறித்து மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் போலீஸ் டிஜிபி ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மணப்பாடு கடற்கரையில் கரை ஒதுங்கிய 20 சிறிய வகைத் திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளன. ஆலந்தழை, கல்லாமொழி அருகே 100க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின. கரை ஒதுங்கிய சிறிய வகை திமிங்கிலங்கள் தொடர்ந்து உயிரிழப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து திமிங்கிலங்கள் உயிரிழப்பு குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
1. Re:... posted byMohamed Shaikna (UK)[12 January 2016] IP: 166.*.*.* United States | Comment Reference Number: 42816
அஸ்ஸலாமு அலைக்கும்.
மனித மக்கள் மடிந்தால் கவலை படாதவர்கள் பிராணிகளின் சாவிற்கு துக்கம் கொள்வார்கள். எது எப்படியோ, இந்த இழப்பு கவலை அளித்தாலும் , இதனால் நம் சுற்று வட்டார மக்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்தால் சந்தோஷம்.
இன்ஷா அல்லாஹ்.
எல்லாம் வல்ல இறைவன் மிகைத்தவன் , அனைத்தும் அறிந்தவன். வஸ்ஸலாம்.
2. posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[13 January 2016] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42824
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
இறையருள் நிறைக.
இந்தக்கடல் மிருகங்களின் மரணம் ஒன்று மனிதன் கடலிலேற்படுத்தியமாசு,அல்லது இரண்டுதினங்களுக்குமுன் இந்தோனேசியாவிற்கருகில் ஏற்பட்ட நில அதிர்வின்காரணமாக இருக்கலாம் எது எப்படியோ இது முதலைகளுக்கும் திமிங்கிலங்களுக்கும் எச்சரிக்கையே பிணத்தை வைத்துப்பணம்பண்ணும் மனிதன் இந்தப்பிணங்களையும் விட்டுவிடவாபோகிறான்.
"இதேநிகழ்வு மனிதன் இறந்து ஒதுங்கினால் சாதிமதமென்ற தீட்டால் தொடுவதில்லை "
4. Re:... posted bySH Kithuru Mohideen (CHENNAI)[13 January 2016] IP: 203.*.*.* India | Comment Reference Number: 42831
திமிங்கலங்கள் மரணம்
காரணம் என்ன?
1. கடல் மாசுபட்டதனாலயா ?
2. அணு -கதிர் வீச்சு காரணமா?
3. ரசாயன கலவை காரணமா?
4. வட கொரியா 'ஹைட்ரஜன் 'குண்டு பரிசோதனை காரணமா?
5. ஏதேனும் ஆழ்கடல் நிலநடுக்கம் காரணமா?
எது எப்படியோ DCw மற்றும் இதர ஆலைகளுக்கு ஒரு பாதகம் வராது அவர்கள் கவனிக்க வேண்டிய ஆள்களுக்கு கவனிச்சி இருப்பார்கள் நாடே கார்பரேட் ஆட்சி தான் சொல்றதுக்கு ஒன்றும் இல்லை இனியாவது மக்கள் சிந்திச்சி செயல் பட்டாள் சரியே!!!!!!!!!!
நம்ம வாய்ல மண்ணு அதிகாரி வாய்ல பொன்னு
நமக்கு சவப்பெட்டி அரசியல் வாதிக்கு பண பெட்டி
அனைத்தையும் வல்ல இறைவன் அறிந்தவன் அவனிடம் பொறுப்பு சாட்டிவிட்டோம் இன்ஷா அலலாஹ் பொருத்து இருந்து பார்போம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross