Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:35:20 PM
வெள்ளி | 6 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1954, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0012:1315:3318:0419:17
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:19Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்10:39
மறைவு17:58மறைவு22:38
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0505:3105:57
உச்சி
12:08
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2018:4619:12
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17144
#KOTW17144
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஐனவரி 14, 2016
ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் பொருளாளர் காலமானார்! ஜன.15 காலை 10 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4874 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (21) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் அல் ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் பொருளாளரும், விஸ்டம் பப்ளிக் பள்ளியின் அறங்காவலருமான குத்துக்கல் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் எம்.என்.முஹம்மத் இப்றாஹீம் மக்கீ, இன்று 18.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74. அன்னார்,

மர்ஹூம் ஷெய்குனா மு.இ.முஹம்மத் நூஹ் ஆலிம் அவர்களின் மகனும்,

மர்ஹூம் சி.மி.அப்துல்லாஹ் ஸாஹிப் அவர்களின் மருமகனாரும்,

எம்.என்.முஹம்மத் நஸ்ருத்தீன், எம்.என்.கமர் அலீ ஆகியோரின் சகோதரரும்,

எம்.ஐ.முஹம்மத் நூஹ் என்பவரின் தந்தையும்,

கே.எம்.அஜ்வாத் (கோனா), ஹாஃபிழ் எம்.ஏ.கனீ முஹம்மத் ஆகியோரின் மாமனாரும்,

மர்ஹூம் கத்தீப் ஷாஹுல் ஹமீத், மர்ஹூம் எஸ்.ஏ,ஸாஹிப் தம்பி ஆகியோரின் மைத்துனரும்,

சிமிசன் செய்யித் உமர், ஷேக் ஷம்சுத்தீன், ஷேகனா லெப்பை ஆகியோரின் சகோதரியின் கணவரும்,

எஸ்.எச்.செய்யித் உமர், எஸ்.எச்.சுலைமான், எஸ்.ஓ.அப்துல்லாஹ் ஆகியோரின் மாமாவும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, 15.01.2016. வெள்ளிக்கிழமையன்று 10.00 மணிக்கு, காயல்பட்டினம் காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
A.A.C. நவாஸ் அஹ்மத்,
(செயலாளர், அல் ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித்)


[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 00:22 / 15.01.2016.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Mohmed Younus K.S (Dubai-UAE) [14 January 2016]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42840

என்னால் அன்புடன் அழைக்கப்படும் "மக்கி மாமா " என்று அழைக்கப்படும் அன்னாரின் வபாத்து அதிர்சிக்குள்ளாக்கியது...அல் ஜாமிஉல் அஜ்காரில் அன்னாரோடு செய்த சிறிய சேவைகள் என் கண் முன் நிற்கிறது...

இறைவனுக்குரிய சேவைகளும், மனிதனுக்குரிய சேவைகளும் ஒருங்கே சேர்ந்து செய்யப்படும் அந்த பள்ளியின் மாமாவுக்கு என ஒதுக்கப்பட்டு இருக்கும் அலுவலகத்தில் சிறுது நேரம் அவர்களோடு அலாவிவிட்டு செல்வதே எனது வழக்கம்...

மாமாவின் பிழைகளை இறைவன் மன்னித்து மேலான சுவனப்பதியை வழங்குவானாக ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Abubacker Siddiq (Riyadh) [14 January 2016]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 42841

اللهم املأ قبره بالنور .. والفسحة والسرور. اللهم جازه بالحسنات إحساناً وبالسيئات عفوا ً وغفرانا اللهم نقه من الخطايا والذنوب كما ينقى الثوب الأبيض من الدنس واغسله بالماء والثلج والبرد اللهم أجره من عذاب القبر ومن فتنة القبر اللهم احشره مع الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين اللهم وألهم أهله وذويه الصبر والسلوان واخلفه فيهم بخير يا مجيب

إنا لله وإنا إليه راجعون.

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப்பொறுத்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் சுவனத்தைக்கொடுத்தருள்வானாக ஆமீன். அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகியபொறுமையைக்கொடுத்தருள்வானாக ஆமீன். ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உங்கள்மீது உண்டாவதாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by CADER (JAIPUR) [14 January 2016]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 42842

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப்பொறுத்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் சுவனத்தைக்கொடுத்தருள்வானாக ஆமீன். அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகியபொறுமையைக்கொடுத்தருள்வானாக ஆமீன். ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உங்கள்மீது உண்டாவதாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Lukman (Tiruvallur) [14 January 2016]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 42843

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஞிவூன். மக்கி ஹாஜி அவர்கள் மிகவும் கறாரான, நேர்மையான மனிதர். அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவனத்தை அருள் புரிவானாக.

லுக்மான்
கோமான்தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...இன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) [14 January 2016]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 42844

இன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. அஸ்ஸலாமு அழைக்கும்
posted by Muhammad Shameem (Hong Kong) [14 January 2016]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 42846

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்"

இறைவா! இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு அருள் புரிவாயாக! இவர்களது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர்கள் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர்கள் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவர்களை தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவர்களை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவர்களுக்கு வழங்குவாயாக! இவர்களை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [14 January 2016]
IP: 66.*.*.* United States | Comment Reference Number: 42848

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [14 January 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42849

انالله وانااليه راجعون

اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஞிவூன்.
posted by முஹம்மது ஆதம் சுல்தான். (yanbu) [14 January 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42850

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஞிவூன். வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பாவப்ம்மது பிழைகளைப் பொறுத்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் சுவனத்தைக்கொடுத்தருள்வானாக ஆமீன். அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையைக்கொடுத்தருள்வானாக ஆமீன். ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உங்கள்மீது உண்டாவதாக ஆமீன்.

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Mauroof (Dubai) [15 January 2016]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42852

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by H.I.RUGNUDEEN BUHARY (Kerala) [15 January 2016]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 42853

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...வருந்துகிறோம்
posted by KASALI MARICAR (KAYAL PATNAM) [15 January 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42854

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஞிவூன். வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பாவப்ம்மது பிழைகளைப் பொறுத்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் சுவனத்தைக்கொடுத்தருள்வானாக ஆமீன். அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையைக்கொடுத்தருள்வானாக ஆமீன். ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உங்கள்மீது உண்டாவதாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Abdul azeez (chennai) [15 January 2016]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 42855

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்"

இறைவா! இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு அருள் புரிவாயாக! இவர்களது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர்கள் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர்கள் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவர்களை தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவர்களை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவர்களுக்கு வழங்குவாயாக! இவர்களை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக! இவர்களின் குடும்பத்தினருக்கு பொறுமையை கொடுத்தருள்வாயாக ! வஸ்ஸலாம்

A. G . அப்துல் அஜிஸ் ,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. பாசத்திற்குரிய தோழப்பா!
posted by S.K.Salih (Kayalpatnam) [15 January 2016]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 42856

என் தந்தையின் - எஞ்சியிருக்கும் மிக நெருக்கமான தோழர்களுள் ஒருவர்... என் பாசத்திற்குரிய தோழப்பா... என் மீதும், என் குடும்பத்தின் மீதும் தீராத அக்கறை கொண்டவர்...

என்றென்றும் வேடிக்கையாகவே பேசிப் பழக்கப்பட்டவர்... அவர் இருக்குமிடத்தில் கலகலப்பிற்குப் பஞ்சமிருக்காது...

கள்ளங்கபடமற்றவர்... எல்லோரும் நல்லா இருக்கனும் என்ற சிந்தனையை தன் நிறைவு நாள் வரை கொண்டிருந்தவர்...

அவர் சார்ந்த ஒரு நிறுவனத்திலிருந்து நான் விடைபெற்ற பிறகு, “கொளத்தோட கோவிச்சிக்கிட்டு ...னாவ கழுவாம போயிட்டியே...?” என்று வேடிக்கையாகச் சொல்ல, அதற்கு நான் என் பாணியில் விளக்கம் சொல்ல - தானும் சிரித்து, என்னையும் சிரிக்கச் செய்தவர்.

ஐ.ஐ.எம். உள்ஹிய்யா ஏற்பாடுகளை முன்னின்று பொறுப்பேற்றுச் செய்தவர்.

ஒருமுறை அவர்கள் ஹஜ் பயணத்திற்காக என்னிடம் பயணம் சொன்னார்...

“மக்கா நா ஹஜ்ஜுக்கு போறேன்... துஆ செய்!”

“அல்லாஹ் உங்க அமல்களை தனதருளால் கபூல் செய்வானாக... உங்க துஆவில் என்னையும், என் குடும்பத்தையும் மறந்துடாதீங்க... வாப்பாவுக்கும் நிறைய கேளுங்க...”

“கண்டிப்பா மக்கா...”

“சரி மாமா... உள்ஹிய்யா வேலையெல்லாம் இருக்கே... பெருநாளுக்குள்ள வந்துடுவீங்களா...?”

“ம்... சொல்ல முடியாதுப்பா... (என்றவர் ஏதோ நினைவுக்கு வந்தவராக) முட்டப்பயலே! போறதே பெருநாளுக்காகத்தானே... பைத்தியமா ஒனக்கு முட்டாப்பய?”

இப்படி சென்றது எங்கள் உரையாடல்!

ஒருமுறை அவர்கள் உள்ஹிய்யாவுக்காக மாடு கொள்முதல் செய்துகொண்டிருந்த காலகட்டத்தில், என் மூத்த நண்பர்கள் சிலரது “வேண்டுகோளுக்கு” இணங்க, அவருக்கு அறிமுகமில்லாத ஓர் எண்ணிலிருந்து அவர்களின் கைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு, செத்துப்போன ஒரு மாடு குறித்து, மாட்டு விற்பனையாளர் போலவே பேசினேன்... அவரும் நம்பி என்னிடம் பேச, சீரியஸாக அவர்களிடம் வாக்குவாதமும் செய்தேன்... (அது ஒரு நீண்ட கதை!)

லுஹ்ர் ஜமாஅத் நேரத்தில் என்னிடம் வந்து, “மக்கா! அந்த மாட்டுக்காரப் பய என்கிட்ட கூடக்கொறைய பேசுனான்... நல்...லா குடு குடுன்னு குடுத்துட்டேன்...”

“(நல்லவன் போல) ஏன் மாமா... என்னெ கூப்பிட மாட்டீங்களா...? என் பங்குக்கு நானும் கிழி கிழின்னு கிழிச்சிருப்பேனே...?”

“சரி வுடுப்பா... போயிட்டுப் போறான்...”

என்று கூறிச் சென்றுவிட்டார்.

அதுவரை என்னுடன் இருந்து சிரித்துக் கொண்டிருந்த மூத்த நண்பர்கள் சிலர், இஷாவுக்குள் அவரிடம் உண்மையைப் போட்டுக் கொடுத்துவிட்டனர்.

“(சிரித்துக்கொண்டே வந்தவர்...) பைத்தியகாரப் பயலே! செய்றதையும் செஞ்சிட்டு, நல்லவன் மாதிரி பேசுறியோ...?

என்று தனக்கே உரிய பாணியில் கேட்க, நான் அவர்களிடம் சிரித்துக்கொண்டே மன்னிப்புக் கேட்டேன்.

மைத்ரிபால சிரிசேனவுக்குக் கூட விளங்க இயலாத சிங்களத்தில் நான் மாமாவிடம் பேச, ஒரிஜினல் சிங்களத்தில் அவர்கள் அதை மறுதலிக்க, மொழியறிந்தோர் அதைப் பார்த்து சிரிக்க, நான் ரசிக்க... -இவையெல்லாம் சில நாட்களுக்கு முன்பு வரை தொடராக நடந்த கதைகள்!

இவற்றையெல்லாம் இங்கே சொல்வதற்குக் காரணம், வயது வேறுபாடின்றி எல்லோரோடும் இணக்கமாகப் பழகியவர் என்பதால்!

அவர்களைப் பார்த்தாலே என் தந்தை என் நினைவுக்கு வந்து செல்வார்... அவர்களின் பேச்சிலும் என் தந்தை குறித்த தகவல்கள் இடம்பெறாமல் இருக்காது...

உளத்தூய்மையான - நேர்மையான - இறையச்சம் கொண்ட தனது தன்னிகரற்ற பணியால் அனைவரையும் கவர்ந்தவர்...

பல்வேறு காரணங்களால் வாக்குவாதங்களில் ஈடுபடுவோரைக் கூட தன் இனிய பண்பால் சில நிமிடங்களில் அமைதிப்படுத்தி விடுவார்...

எழுதினால் நிறை....ய எழுதிக்கொண்டே போகலாம்!

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க எனதன்பு மக்கி மாமா அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

எனதன்பு தோழப்பாவின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களின் குடும்பத்தார், அவர் சார்ந்த நிர்வாகத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Sulthan (Dubai) [15 January 2016]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42857

இன்னலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. انا لله وانا اليه راجعون
posted by prabushaikna (Bangalore) [15 January 2016]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 42859

அல்லாஹ் ஒருவனே நம் அனைவருக்கும் போதுமானவன். மதிப்பிற்குரிய ஜனாப் மக்கி மச்சான் அவர்கள் என் மனைவி வீட்டார்க்கு சொந்த காரர் மட்டுமின்றி அண்டை வீட்டு காரரும் கூட. அவர்களை நான் வீட்டில் சந்தித்ததை விட, தன்னை தீனின் வழியில் செலவு செய்து பொது இடங்களில் சந்திததுதான் அதிகம். நடையில் நிதானம் ஆனால் சுறுசுறுப்பு. அப்பேற்பட்ட இந்த நல்ல மனிதனின் திடீர் மௌத் செய்தி அறியப்பட்டு கவலை கொண்டேன். انا لله وانا اليه راجعون .

அல்லாஹ்தான் அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் சபூர் எனும் பொறுமையை கொடுப்பதோடு, அன்னாரின் பிழைதனை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் அழகிய சுவனபதிதனை கொடுத்தருள்வானக

أمين أمين يأرب العالمين
السلام عليكم ورحمة الله وبركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [15 January 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42860

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter. Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [16 January 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42861

அஸ்ஸலாமு அலைக்கும்

>> இன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்.) [16 January 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42863

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மக்கி மாமா உடைய மரண செய்தியை படித்ததும், அமர்ந்து இருந்த நாற்காலிக்கு அடியில் ஏதோ ஒரு நடுக்கம் உண்டானது. இன்னும் அது மாறவில்லை.

எனக்கு அடுத்த வீடு. என் தம்பி கனி முஹம்மது உடைய மாமனார். தினமும் பலமுறை சந்திக்கும் முகம். யா அல்லாஹ்.

மெலிந்த தேகத்தில், இலக்கிய மனதுடைய, இரும்பு மனிதர்.

கடமையில் கண்டிப்பும், சுத்தமும், நேர்த்தியும், நேர்மையும் கொண்டவர்கள்.

தவறு செய்பவர்களை கண்டால் நேரடியாக, கோபம் கொண்டு கண்டிக்க தயங்காதவர். மனதில் வன்மம் இல்லாதவர்.

காலையில் தன் பேரப்பிள்ளைகளோடு, பள்ளிக்கூட பைகளை கையில் வைத்துக்கொண்டு, விஸ்டம் பைள்ளிக்கூட வாகனத்தில் செல்லும் அழகு கண்ணில் நிற்கின்றது.

யார் சண்டை போட்டாலும் பிடிக்காது. உடனே சமாதனம் செய்து வைத்து, பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் .அவர்கள் அடிக்கடி உதிக்கும் வார்த்தை " சரி விடுப்பா ... சரி விடுப்பா ..." என்றே இருக்கும்.

நகைசுவை உணர்வு மிக்கவர்கள். சில சமயம் அவர்கள் கூறிய ஜோக்குகள் சில நாட்களுக்கு பின்பு புரிந்து சிரிக்கும் அளவு கூட இருக்கும்.

சில மாதங்களுக்கு முன்பு, அவர்களுடைய அருமை மகன், எனது நண்பன் எம்.ஐ.முஹம்மத் நூஹ், இருதய பிரச்சனையில் மிகவும் கஷ்டப்பட்டு, அல்லாஹ்வின் உதவியால் மீண்டு வந்துள்ளார். அந்த நிகழ்வுக்கு பின்பு தான், மக்கி மாமா அவர்கள் மிகவும் கவலைப்பட்டு, நொடிந்து போனார்கள், இரும்பு மனித உடம்பில் துரு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

ரிடையர்ட் வாழ்க்கைக்கு பின்பும், மீண்டும் ஸ்ரீலங்கா செல்லனும், வாணிபம் செய்யனும், மகனுக்கு நல்ல ஓர் ஏற்பாடு செய்யனும் என்று கூறி வந்துள்ளார்கள்.

இவர்களின் மறைவுக்கு வலைத்தளத்திலும், சமூக தளங்களிலும் நம் சகோதரர்கள் பதிந்துள்ள கருத்துகளையும், துஆக்களையும் பார்த்து, மாமா அவர்களுக்கு சுவனம் நிச்சயம் என்று அறிய முடிகின்றது. இன்ஷா அல்லாஹ். அல்ஹம்து லில்லாஹ்.

அனஸ் (ரலி) அறிவித்தார்கள்.. ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது" என்றார்கள்.

மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது?' எனக் கூறினார்கள்.

உமர்(ரலி) 'எது உறுதியாகிவிட்டது?' எனக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள், 'இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள். எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாகவீர்கள்" எனக் கூறினார்கள்.

( ஸஹீஹ் புஹாரி 1367 )

இவர்களின் இழப்பு எங்கள் குடும்பத்திற்கும், ஜாமிஉல் அஜஹர், ஐ‌ஐ‌எம், விஸ்டம் பள்ளிக்கூடம் மற்றும் நம் ஊருக்கும் பெரும் இழப்பு.

கிருபை யுள்ள வல்ல அல்லாஹ் இவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவனத்தில் காணும் அறிய வாய்ப்பை நமக்கு தருவானாக.

அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை தருவானக.

அன்பு நண்பா நூஹு, உன் தந்தையை விட, உன்மீது கணக்கில் அடங்கா அளவு அன்பு வைத்துள்ள அல்லாஹ்வின் அருள் உங்களுக்கும், எங்களுக்கும் உள்ளது கவலைப்படாமல் பொறுமையுடன் இரு.

கண்ணீருடன்,

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [16 January 2016]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42865

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லிள்ளஹி வா இன்னா இலைஹி ராஜ்ஹீவூன்!!!!

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான ஜன்னதுல் பிர்தவ்சுல் எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
எஸ். இ. முகமது ஹரிரி
எஸ். இ. ஹுசைன் சலாஹுதீன்
எஸ். இ. ஹம்தான் இபுராஹீம்
எஸ். இ. ஹஸ்ஸான் இபுராஹீம்
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by MAHABOOB HUSAIN (chennai) [17 January 2016]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 42872

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்"

இறைவா! இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு அருள் புரிவாயாக! இவர்களது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர்கள் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர்கள் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவர்களை தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவர்களை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவர்களுக்கு வழங்குவாயாக! இவர்களை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved