கத்தர் காயல் நல மன்றத்தின் கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறையருளால் எமது கத்தர் காயல் நல மன்றத்தின் 79ஆவது செயற்குழுக் கூட்டம், 08.01.2016. வெள்ளிக்கிழமையன்று, கத்தர் நகரிலுள்ள பர்வா சிட்டி பூங்காவில் மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கூட்ட நிகழ்வுகள்:
ஹாஃபிழ் எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்ற செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான் அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
தலைமையுரை:
துவக்கமாக பேசிய தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் தலைமையுரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம்:-
வளைகுடா நாடுகளில் குறைந்த உறுப்பினர்களை கொண்டு நிறைவான சேவைகளை - இறையருளால் இயன்ற வரை சிறப்புற செய்து வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ்...! இக்கூட்டம் நம் மன்றத்தின் 9ஆம் ஆண்டு ஆரம்பமாகும். இந்த ஆண்டில் நமது செயற்திட்டங்கள் வழமை போல் அல்லாமல் சற்று மாறுபட்டு புதுப்பொலிவுடனும், புதிய சிந்தனையுடனும் செயல்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் புதிதாக வந்திருப்போர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதை முக்கியத்துவமாகக் கொண்டும், நடப்பு சூழல்களைக் கருத்திற்கொண்டும் - இந்தப் புதிய ஆண்டில் நம் மன்றத்தின் நிர்வாகக் குழுவை மறுவடிவமைப்பு செய்துள்ளோம். நம் நகருக்கு நாம் செய்ய வேண்டிய பணிகள் நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆகையால், தற்போது உள்ள வேகத்தை இன்னும் அதிகரித்து உற்சாகத்துடன் புதிய தலைமையின் கீழ் செயலாற்ற வேண்டும்.
இம்மன்றம் ஆரம்பமாக காரண கர்த்தாவாக இருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும், இத்தனை காலம் என்னுடன் ஒத்தாசையாய் இருந்து ஒத்துழைப்பு நல்கிய அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், மன்றப் பிரதிநிதி ஜனாப் எஸ்.கே.ஸாலிஹ் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
இதுநாள் வரை நீங்கள் எனக்கு வழங்கிய அதே ஆதரவை இப்புதிய நிர்வாகக் குழுவிற்கும் மனமுவந்து வழங்கிட வேண்டுகிறேன். இனிவரும் காலங்களில் நான் ஆலோசனைக் குழுவின் மூலம் உங்களுடன் என்றும் இணைந்திருப்பேன். உங்கள் அனைவருக்கும் எனது பிராத்தைனையுடன் கூடிய வாழ்த்துக்கள்...!!!
இவ்வாறு அவர் பேசினார். தற்காலச் சூழலையும், தேவையையும் கருத்திற்கொண்டு கூட்டத்தில், பின்வருமாறு மன்றத்தின் நிர்வாகக் குழு மறுவடிவமைப்பு செய்யப்பட்டது.
ஆலோசனைக் குழு:
(1) சோனா எஸ்.எம்.இ.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
(2) சொளுக்கு எம்இ.செய்யித் முஹம்மத் ஸாஹிப் (செய்து மூஸா)
(3) கே.வி.ஏ.டீ.ஹபீப் முஹம்மத்
(4) எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம்
நிர்வாகக்குழு உறுப்பினர்கள்:
தலைவர்:
எம்.என்.முஹம்மத் யூனுஸ்
துணைத் தலைவர்கள்:
(1) கே.எஸ்.மொகுதூம் மீரான்
(2) ஏ.ஏ.செய்யித் முஹ்யித்தீன்
செயலாளர்:
எம்.என்.முஹம்மத் ஸுலைமான்
துணைச் செயலாளர்கள்:
(1) எஸ்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன்
(2) கத்தீபு ஏ.ஆர்.எம்.மாமுனா லெப்பை
பொருளாளர்:
கே.எஸ்.டீ.முஹம்மத் அஸ்லம்
துணைப் பொருளாளர்கள்:
(1) ஹாஃபிழ் ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன்
(2) ஹாஃபிழ் M.M.L.முஹம்மத் லெப்பை
சந்தா பொறுப்பாளர்:
எம்.என்.ஷாஹுல் ஹமீத்
மருத்துவக் குழு:
(1) பி.ஃபைஸல் ரஹ்மான்
(2) இசட்.முஹம்மத் அப்துல் காதிர்
(3) கே.எம்.டீ.ஷேக்னா
கல்விக் குழு:
(1) ஹாஃபிழ் எச்.எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ்
(2) பி.எம்.ஹுஸைன் ஹல்லாஜ்
(3) கத்தீபு எம்.எம்.ஜியாத்
ஏற்பாட்டுக் குழு:
சொளுக்கு எஸ்.எம்.முஹம்மத் இப்றாஹீம்
பிரதிநிதி:
எஸ்.கே.ஸாலிஹ்
தீர்மானங்கள்:
நகர்நலன் குறித்த பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - புதிய நிர்வாகக் குழுவிற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறல்:
தற்காலத் தேவை மற்றும் சூழலைக் கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாகக் குழு மறுவடிவமைப்புக்கு பொதுக்குழுவின் ஒப்புதலை முறைப்படி பெறவும், வழமை போல மன்றத்தின் அனைத்து அங்கத்தினரும் முழு ஒப்புதல் அளிக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 - நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி:
மன்றத்தின் முக்கிய செயல்திட்டங்களான – (1) ஏழை மாணவ-மாணவியருக்கு பள்ளிச் சீருடை இலவச வினியோகம், (2) புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம், (3) நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி உள்ளிட்டவற்றை சிறப்புற நடத்தித் தந்தமைக்காக, இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத், அவருடன் இணைந்து பணியாற்றிய மன்றப் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ் மற்றும் விடுமுறையில் ஊரிலிருந்த மன்ற அங்கத்தினர் யாவருக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்வதோடு, அவர்கள் யாவருக்கும் கருணையுள்ள அல்லாஹ் நல்ல உடல் நலனையும், நிறைவான வளங்களையும், நீண்ட ஆயுளையும் வழங்கிட பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 3 - எக்காலமும் துணைநிற்கும் பெரியவருக்கு நன்றி:
மன்றப் பணிகளை நகரில் உடனுக்குடன் செய்திட, எந்த நேரமாக இருந்தாலும், தன்னலம் பாராது பணியாற்றி - எல்லா வகையிலும் எல்லாக் காலங்களிலும் ஒத்துழைப்பளித்து வரும் பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி அவர்களுக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்வதோடு, அவர்களுக்கு கருணையுள்ள அல்லாஹ் நல்ல உடல் நலனையும், நிறைவான வளங்களையும், நீண்ட ஆயுளையும் வழங்கிட பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 4 - ரியாத் கா.ந.மன்ற புதிய நிர்வாகக் குழுவிற்கு வாழ்த்து:
சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளை இக்கூட்டம் மனதார வாழ்த்துவதுடன், அவர்களின் பணி சிறக்க பிரார்த்திக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைவருக்கும் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் அவர்களின் அனுசரணையில் மதிய உணவு ஏற்பாடு செய்யபட்டிருந்தது.
புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவிற்கு அனைவரும் வாழ்த்து தெரிவிக்க, குழுப்படப் பதிவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி - கத்தர் கா.ந.மன்றம்)
கத்தர் கா.ந.மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|