காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள் கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
ஐனவரி 15, 2001 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 30]
திங்கள், ஐனவரி 15, 2001
காயல்பட்டணம் கடற்கரையில் மீனவர்களுக்கு உதவி!
செய்தி: மாஸ்டர் கம்ப்யூட்டர்
காயல்பட்டணம் கடற்கரை சிங்கித்துறையில் மீனவர்களுக்கான தொகுப்பு வீடு திறப்பு விழா, மற்றும் உதவிகள் வழங்கும் விழா 13-1-2001 சனிக்கிழமை காலை 11 மணிக்கு சிங்கித்துறையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.மாலிக் பெரோஸ்கான் ஐ.ஏ.எஸ். தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குனர் டாக்டர். லிங்கராஜா வரவேற்றுப் பேசினார். தொகுப்பு வீடுகளை திறந்து வைத்து மீனவர்களுக்கான வலைகள், எந்திரங்கள், சமையல் பாத்திரங்கள், இரு சக்கர மோட்டார் வாகனங்களை வழங்கி தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு திருமதி.எஸ்.ஜெனிபர் சந்திரன் சிறப்புரையாற்றினார். விழாவில் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் வித்யாசாகர், காயல்பட்டணம் பேரூராட்சி துணைத்தலைவர் எஸ்.செய்யது அகமது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் கிங்ஸ்லிலேய்ன் நன்றி கூறினார்.
|