காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி முன்னாள் மாணவர்களைக் கொண்டு எல்.கே. பயின்றோர் பேரவையை புதுப்பொலிவுடன் மீண்டும் துவக்கிட தீர்மானிக்கப்பட்டு, அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கலந்தாலோசிப்பதற்காக, 16.01.2016. சனிக்கிழமையன்று காலை 10.00 மணியளவில், எல்.கே.மேனிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர் கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பதிவேட்டில் விபரங்களைப் பதிவு செய்தவர்களாக அனைவரும் கூட்ட அரங்கிற்குள் சென்றனர்.
பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.கே.லெப்பைத்தம்பி முன்னிலை வகித்தார். ஏ.எஸ்.ஷம்சுத்தீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். எம்.ஏ.முஹம்மத் உமர் வரவேற்றுப் பேசினார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா தலைமையுரையாற்றினார்.
லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன், காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், எல்.டீ.இப்றாஹீம், எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், பணி நிறைவுபெற்ற ஆசிரியர் எம்.ஏ.புகாரீ ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
பள்ளியின் முன்னாள் மாணவர்களான எம்.ஏ.முஹம்மத் இப்றாஹீம் (48), ஏ.எஸ்.அஷ்ரஃப், ஜெய்னுல் ஆப்தீன், எம்.ஏ.காழி அலாவுத்தீன், நூலகர் அ.முஜீபுர்ரஹ்மான், ராம்குமார், ஆசிரியர் ரஞ்சித் குமார், உமர் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.
வரும் மே மாதத்தில் விடுமுறையில் அனைவரும் தாயகம் வருவதைக் கருத்திற்கொண்டு, அனைவரும் கலந்துகொள்ளும் வகையிலான கூட்டத்தைக் கூட்டி, பயின்றோர் பேரவையை முறைப்படி துவக்கி, நிர்வாகிகளையும் தேர்ந்தெடுத்திட இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மோகன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை ஜெ.ஏ.லரீஃப் நெறிப்படுத்தினார். எம்.சதக், ஆசிரியர் எஸ்.ஏ.என்.அஹ்மத் மீராத்தம்பி ஆகியோர் கூட்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இக்கூட்டத்தில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சுமார் 80 பேர் கலந்துகொண்டனர். நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
தகவல் & படங்களில் உதவி:
ஆசிரியர் S.B.B.புகாரீ
எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |