தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில், 31.01.2016. அன்று திருச்சியில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்தப்படவுள்ளது.
இம்மாநாடு குறித்து பொதுமக்களுக்கு விளக்குவதற்காக, அவ்வமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், வள்ளல் சீதக்காதி திடலில், இன்று (17.01.2016. ஞாயிற்றுக்கிழமை) 19.00 மணிக்கு, ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், அப்துல் கரீம் - “ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன், எதற்கு?” எனும் தலைப்பிலும், சுல்தான் இல்ஹாமீ - “சத்தியம் எங்கே?” எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றவுள்ளனர்.
அனைவரும் கலந்துகொள்ளுமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தகவல்களுள் உதவி & படம்:
M.M.முஜாஹித் அலீ
ததஜ தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக!
|