தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில், 31.01.2016. அன்று திருச்சியில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்தப்படவுள்ளது.
இம்மாநாடு குறித்து பொதுமக்களுக்கு விளக்குவதற்காக, அவ்வமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், வள்ளல் சீதக்காதி திடலில், 17.01.2016. ஞாயிற்றுக்கிழமையன்று (நேற்று) 19.00 மணிக்கு, ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட தலைவர் முஹம்மத் அய்யூப் தலைமை தாங்கினார். கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். “தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகள்” எனும் தலைப்பில், காயல்பட்டினம் ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியின் கத்தீப் மவ்லவீ அப்துல் மஜீத் உமரீ துவக்கவுரையாற்றினார்.
தொடர்ந்து, மாநில பேச்சாளர் அப்துல் கரீம் - “ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன், எதற்கு?” எனும் தலைப்பிலும், மாவட்டப் பேச்சாளர் சுல்தான் இல்ஹாமீ - “சத்தியம் எங்கே?” எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்.
காயல்பட்டினம் நகர கிளை செயலாளர் அபூதாஹிர் நன்றி கூறினார். இக்கூட்டத்தில், அமைப்பின் தூத்துக்குடி மாவட்டக் கிளை அங்கத்தினரும், காயல்பட்டினம் நகர பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர். மகளிருக்கு, அசைபட விரிதிரை ஏற்பாட்டுடன் தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
ததஜ தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக!
|