Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:27:52 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17175
#KOTW17175
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஐனவரி 19, 2016
எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்! அதிமுகவினர் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2554 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரனின் 99ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், 18.01.2016. திங்கட்கிழமையன்று 19.00 மணியளவில், நகர துணைச் செயலாளர் பூந்தோட்டம் பீ.கணேசன் தலைமையில் நடைபெற்றது.

நகர அவைத்தலைவர் என்.பீ.முத்து, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 11ஆவது வார்டு உறுப்பினரும் - துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன், கே.ஜெய்னம்பு, எம்.ஜி.ஆர். என்ற எம்.டீ.எஸ்.அப்துல் காதர், சிறுபான்மைப் பிரிவு நகர செயலாளர் என்.எம்.அஹ்மத் உள்ளிட்ட - கட்சியின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

பூந்தோட்டம் பீ.மனோகரன் வரவேற்புரையாற்றினார். காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி, இளந்தளிர் முத்து, காயல் மவ்லானா, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜேசுராஜ், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.





மறைந்த தமிழக முதல்வரும் - அதிமுக பொதுச்செயலாளருமான எம்.ஜி.ராமச்சந்திரன் உடைய வாழ்க்கை வரலாற்றை விளக்கி, சோலை இரா. கண்ணன் சிறப்புரையாற்றினார்.



இக்கூட்டத்தில் அதிமுகவினர் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை, அதிமுக நகர செயலாளர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் ஒருங்கிணைப்பில், கட்சியினர் செய்திருந்தனர்.









அதிமுக சார்பில் கடந்தாண்டு நடத்தப்பட்ட எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா குறித்த காண இங்கே சொடுக்குக!

அதிமுக தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [19 January 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42883

அட டா ...!! தலைவருடைய பிறந்தநாள் விழாவிற்கே ஆட்கள் இல்லையே.

முக்கிய நபர்கள் எல்லாம் வருவதாக அறிவித்து இருந்தீர்கள், யாரையும் காணோமே.!!

நாற்காலிகள் அனைத்தும் காலியாகவே உள்ளன.

விளம்பர நோட்டிசில் அச்சடித்து இருக்கும் 140 நபர்களும் கலந்து கொண்டிருந்தாலே இந்த கூட்டம் மிக விமர்சையாக இருந்து இருக்குமே.

ஆக, யானை பலத்துடன் இருந்த கழகம், கட்டெறும்பாக தேய்ந்து வருவதை கண்கூடாக காண முடிகிறது. அதுவும் பட்டத்து யானை...??

அட்மின் அவர்களே, காயல் மௌலானா காக்கா அவர்களை, டாக்டர் என்று குறிப்பிடலாமே. சமீபத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் தானே..!!

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. கூட்டத்தில் கலந்தீங்க முக்கிய பதவி போய்விடும் போங்க..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [19 January 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42886

அ.தி.மு.க.பொதுக்கூட்ட பிரசுரத்தில் சுமார் 100 நபர்களுக்கும் மேலான பெயர்கள் அடங்கிய விரிவான பிரசுரத்தின் ஒரு பகுதியை மட்டும் படித்தேன் மறு பகுதியில் அனேகமாக 50 நபகளின் பெயர்கள் அடங்கி இருக்கலாம் என நினைக்கிறேன் - ஆனால் இருக்கையின் (சேர்) எண்ணிக்கையோ 50 ஐ தாண்டியது போல் தெரியவில்லை அதில் அமர்ந்திருப்பதோ 32 நபர்கள் தான் எனது எண்ணிகையில் தென்படுகின்றன - கட்சியின் உண்மை விசுவாசிகளான கட்சியின் மூத்த உறுப்பினகள் பலரை அங்கு காண கிடைக்கவில்லை - அங்கு மேடையில் அமர்ந்திருபதோ கட்சி விட்டு - கட்சி மாறிய தலைகளே தென்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது..

புரட்சி தலைவர் M G R துவக்கிய அ.தி.மு.க வின் உண்மை விசுவாசிகள் பலர் இக்கூட்டத்தை புறக்களித்ததாக வெளியில் பேசிக்கொள்வதை காண முடிந்தது - முக்கிய நபர்கள் எல்லாம் கூட்டத்திற்கு வருவதாக அறிவித்து இருந்த பிரசுரத்தில் அவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாது போன உண்மை நிலவரம் என்னவென்று அறிய மேடைக்கு பின்புறம் நின்ற ஒரு உளவு பிரிவு அதிகாரி சொன்ன தகவல் என்னவென்றால் நகர கழகம் வெளியிட்ட துண்டு பிரசுரத்தில் நகர்மன்ற தலைவர் பெயர் இடம்பிறாத இக்கூட்டத்தில் தாம் கலந்து கொண்டு பேசினால் கட்சி தலைமையின் மேலிட பிரச்சனைக்கு தாம் ஆளாக நேரிடும் என்றும் தமக்கு வழங்கபட்டிருக்கும் பதவி எந்நேரத்திலும் பறிக்க படலாம் எனவும் அதனால் தவிர்த்து இருக்கலாம் எனவும் தெரிவித்தார்..

எது எப்படியோ போங்க..! நகர் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த குப்பை கிடங்கிற்கு (அது அமைய பெற) அம்மா ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்காமல் நகரமக்கள் விரும்பாத / எதிர்பார்க்காத பயோ கேஸ் பிளான்ட் (ரூபாய் 90 லட்சம் மதிப்பின் திட்டம்) க்கு மட்டுமே முக்கியத்துவும் அளித்து ஆளும் கட்சியின் நகர பிரமுகர்கள் எல்லாம் நகராட்சி ஆணையிடம் தினம் தினம் தனிமையில் கூடி பேசி கடைசி வரை நகர மக்களின் விருப்பமான சர்வே எண் 278 இல் குப்பை கிடங்கு பணியை துவங்காமல் அங்கு ரூபாய் 90 லட்சம் - பயோ கேஸ் க்கு மட்டுமே ஆர்வம் செலுத்தி நகர்மன்ற தலைவருக்கும் / நகரின் பொது மக்களுக்கும் தெரியாமல் காட்டுக்குள்ளே திருட்டு தனமாக நகராட்சி அதிகாரிகள் பூமி பூஜை போட்டு பிறகு இறுதியில் அந்த பயோ கேஸ் திட்ட பணி நீதி மன்றத்தில் நிலுவையிலுள்ளது - இது நகரின் அம்மா திட்ட சாதனை..!

இங்கு நடக்கும் சம்பவங்கள் எல்லாம் அம்மாவிற்கு தெரியுமா..? என்பது குறித்த கேள்விகளுக்கு இவர்களிடம் விடை இல்லை..

மொத்தத்தில் உண்மை விசுவாசிகள் பலரின் அதிர்ப்தியில் ஏற்பாடு செய்யப்பட்ட பொது கூட்டம் இது - அதான் நாற்காலிகள் காலியாக கிடக்கின்றன..!

அம்மாவிற்கு பிறகு தலைவர் - தலைவருக்கு பிறகு அம்மா இப்படியே இந்த தமிழகம் நகரும் - மக்களின் கையில் ஓட்டுக்கு பணமும், மதுவும், பெட் சீட்டும் தொடரும் போங்க..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அலைகடலென திரண்டிருக்கும் ....
posted by Khatheeb Muhammad Muhyiddeen (Doha) [20 January 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 42902

வரும்....!

ஆனா....

வராது...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [31 January 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42986

அஸ்ஸலாமு அலைக்கும்.

எதற்காக இந்த கூட்டம் நடத்த பட்டதோ அதை மறந்து இவர்கள் …..நகர் மன்ற தலைவி அவர்களை பற்றி குறை கூறி புராணம் பாடியதாகவே ஒரு வாசகம் …அப்படி .பார்க்கும் போது இந்த கூட்டம் ஒரு பண்பானது என்று சொல்ல முடியாது ….

நம் மரியாதைக்குரிய நகர் மன்ற உறுப்பினர்கள் குறையை தவிர்த்து ,, நிறைவை ,, நிறைவேற்ற செய்யுங்கள் அது போதும் ….நாங்கள் உங்களிடம் இருந்து எதிர் பார்ப்பதே அதை தான் ....

காலம் கடந்து …நம் நகராச்சியின் காலமும் முடியும் தருவாயில் …..உள்ளது ….இனி சொல்வதிலும் ,,நினைப்பதிலும் அர்த்தமே இல்லை …..

தற்போது வரகூடிய தமிழக தேர்தலுக்கு தேவையான ..நம் மரியாதைக்குரிய தமிழக முதல்வர் அம்மா அவர்களின் சாதனைகளையாவது இவர்கள் முறையாக பேசி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்….கொஞ்சம் ADMK கட்சிக்கு உபயோகம் பட்டு இருக்கும் …..

மக்கள் கூட்டமும் அப்படி ஒன்றுமே இல்லையே ..... காரணம் என்னவோ ....கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவி அவர்களை அழைக்காதது ஒரு குறையே ....அவர்களும் ADMK கட்சியில் ஒரு முக்கிய பங்கு வகிப்பவர்களே ...... தேவைகற்ற நகர் மன்ற உறுப்பினர்களை மேடை ஏற்றி தேவைக்கு இல்லாது பேசியதும் நாகரிகம் அல்லவே .....

தேர்தல் வரும் இந்த நேரத்தில் கட்சி சாதனைகளை வரிசைபடுத்தி சொல்லியும் ,, அடுத்து வெற்றி பெற்று நாங்கள் இவைகளை எல்லாம் சாதனையாக்கி காட்டுவோம் . என்று பேசி இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும் .....

பார்வையாளர்களின் எண்ணிக்கை மிக குறை ..மேடையில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை தான் அதிகமோ .....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved