சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவின் பேரில், காயல்பட்டினம் நகராட்சியின் கே.டி.எம். தெரு, பிரதான சாலை, எல்.கே.லெப்பை தம்பி சாலை ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
அந்த வரிசையில் இன்று - பிரதான சாலை, எல்.கே. லெப்பை தம்பி சாலையை இணைக்கும் நாராயண ஓடை எனப்படும் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்றன.
இந்த பணிகளின் போது - - வருவாய் துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் நிகழ்விடத்தில் இருந்தனர்.
புகைப்படங்களில் உதவி:
ஹாஜி எஸ்.ஏ.முஹைதீன்
மற்றும்
தமிழன் முத்து இஸ்மாயில்
[கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 15:17 / 21.01.2016.] |