சூரியனை சுற்றி வரும் 8 கிரகங்களில் (PLANETS) ஐந்து கிரகங்கள் - வெறுங்கண்களால் காண கூடியவை (NAKED EYE PLANETS). சூரியனுக்கும், அந்த கிரகங்களுக்கும் உள்ள தூரத்தின் காரணமாகவும், தங்கள் சுழற்சியில் அவை சூரியனை விட்டு பல திசைகளிலும் விலகி இருக்கும் என்பதாலும், பூமியில் இருந்து அந்த 5 கிரகங்களையும் ஒரே நேரத்தில் பார்ப்பது மிகவும் அரிதான விஷயமாகும்.
கடைசியாக அது போன்ற காட்சி 2005ம் ஆண்டு காண கிடைத்தது. தற்போது - ஜனவரி 20 முதல் பிப்ரவரி 20 வரை, ஐந்து கிரகங்களையும் ஒன்று
சேர காணலாம் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த காட்சியினை உலகின் வட பாதி நாடுகள் அனைத்திலும் (NORTHERN HEMISPHERE) காணலாம்.
தென் மேற்கு வானில் சுமார் இரவு 9:49 மணியளவில் குரு (JUPITER) முதலில் உதிக்கும். அதனை தொடர்ந்து நள்ளிரவு 00:54 மணிக்கு தெற்கு வானில் செவ்வாய் (MARS) உதிக்கும். 3:15 மணிக்கு தென் கிழக்கு வானில் சனி (SATURN) உதிக்கும், 4:18 மணிக்கு சுக்ரன் (VENUS) கிரகமும், இறுதியாக அதிகாலை 5:33 மணிக்கு புதன் (MERCURY) உதிக்கும்.
சூரியன் உதிப்பதற்கு சுமார் 1 மணி நேரத்திற்கு முன்னர், வானில் இந்த 5 கிரகங்களையும் காணலாம்.
மேலே வழங்கப்பட்டுள்ள நேரங்கள் - இன்றிரவு மற்றும் நாளை காலை - காயல்பட்டினத்திற்கு உரியவை. அடுத்தடுத்த தினங்களில் இந்த கிரகங்கள்
உதிக்கும் நேரம் - 2 / 3 / 4 நிமிடங்களுக்கு மாறுப்படும். சுக்ரன் (VENUS) கிரகத்தை பொறுத்தவரை, தினமும் - 2 / 3 / 4 நிமிடங்கள் தாமதமாக
உதிக்கும்; பிற (4) கிரகங்கள், 2 / 3 / 4 நிமிடங்கள் முன்னரே உதிக்கும்.
இவ்வாண்டு ஆகஸ்ட் 13 முதல் 19 வரை, இதே போல காட்சி, சூரியன் மறைந்தப் பிறகு, மாலை / இரவு வானில் காண கிடைக்கும் என்றும்
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
காயல்பட்டினம் வானில், தற்போது (மற்றும் தேர்ந்தெடுக்கும் தேதி/நேரத்தில்) என்னென்ன கிரகங்கள், நட்சத்திரங்கள், பிற விண்வெளி பொருட்கள் தென்படும் என அறிந்திட - தற்போதைய காயல் வானம் என்ற பிரத்தியேக பக்கம் (http://kayalpatnam.com/currentsky.asp), காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் உள்ளது. அப்பக்கத்தை காண இங்கு சொடுக்கவும்.
படங்கள்:
THE NEW YORK TIMES / SKY & TELESCOPE |