பல்லாண்டு காலமாக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட - அனைத்து வாழ்நாள் தண்டனைக் கைதிகள் விடுதலை கோரி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் அமைப்பான மனிதநேய மக்கள் கட்சி (மமக) சார்பில், சென்னை, கோயமுத்தூர், மதுரை ஆகிய நகரங்களில், 07.02.2016. ஞாயிற்றுக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இவ்வார்ப்பாட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து கலந்துகொள்வது தொடர்பான ஏற்பாடுகள் குறித்த தமுமுக / மமக தூத்துக்குடி மாவட்ட கலந்தாலோசனைக் கூட்டம், 19.01.2016. செவ்வாய்க்கிழமையன்று, அதன் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆஸாத் தலைமை தாங்கினார். தமுமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் யூஸுஃப் முன்னிலை வகித்தார். எம்.கே.ஜாஹிர் ஹுஸைன் வரவேற்புரையாற்றினார்.
நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டு, பொறுப்புகள் வகைப்படுத்தப்பட்டு, அவற்றுக்கான பொறுப்பாளர்களும் இக்கூட்டத்தில் நியமிக்கப்பட்டனர்.
ஹஸன் நன்றி கூற, கஃப்பாரா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்ட ஏற்பாடுகளை, மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகி ‘முர்ஷித்’ கே.முஹ்ஸின் ஒருங்கிணைப்பில், குழுவினர் செய்திருந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் நலன் கருதி நடத்தப்படவுள்ள இவ்வார்ப்பாட்டத்தில் திரளாகக் கலந்துகொள்ளுமாறு, தமுமுக / மமக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளர்.
தகவல் & படங்கள்:
‘முர்ஷித்’ K.முஹ்ஸின்
(முர்ஷித் டிஜிட்டல் ஜெராக்ஸ்)
தமுமுக / மமக தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக! |